நிலவு சுற்றுப்பாதையில் இந்திய-அமெரிக்க விண்கலங்கள் மோதல் தவிர்ப்பு – விஞ்ஞானிகளின் துரித நடவடிக்கை✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

நிலவு சுற்றுப்பாதையில் இந்திய-அமெரிக்க விண்கலங்கள் மோதல் தவிர்ப்பு – விஞ்ஞானிகளின் துரித நடவடிக்கை

பெங்களூரு,

ரஷிய நாட்டுக்கு சொந்தமான சிறிய வகையிலான பூமியின் தொலை உணர்த்தலுக்கான செயற்கைகோளான கானோபஸ்-வி என்ற விண்கலத்தின் மீது இந்தியாவுக்கு சொந்தமான பூமி தொலை உணர்த்தலுக்கான செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2எப் என்ற 700 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் சுற்றுப்பாதையில் செயல்பட்டு வருகின்றன.

இந்த செயற்கைகோள்கள் கடந்த ஆண்டு நவம்பர் 27-ந் தேதி 224 மீட்டர் தூர இடைவெளியில் வந்த போது ஒன்றோடு ஒன்று மோத இருந்தது. இதனை இருநாட்டு விஞ்ஞானிகளும் சரியான நேரத்தில் கண்டுப்பிடித்து உரிய நடவடிக்கை மூலம் மோதலை தவிர்த்தனர்.

இதேபோன்று கடந்த மாதம் 20-ந் தேதி காலை 11.15 மணி அளவில் நிலவின் வடதுருவத்திற்கு அருகில் நிலவு சுற்றுப்பாதையில் ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த சந்திரயான்-2 விண்கலமும், அமெரிக்காவின் நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் (எல்.ஆர்.ஓ.) என்ற விண்கலமும் நிலவு சுற்றுப்பாதையில் நிலவின் வட துருவத்தை நெருங்கிச் சென்ற போது ஒன்றோடு ஒன்று மோத இருந்தது.

இந்த இரண்டு விண்கலத்திற்கு இடையேயான ரேடியல் செயல்பாடு 100 மீட்டருக்கும் குறைவாக இருந்தது. இதனை கண்டுப்பிடித்த இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் துரிதமாக கண்டுப்பிடித்து விண்கலங்கள் மிக அருகில் செல்லும் அபாயத்தைத் தணிக்க, மோதல் தவிர்ப்பு சூழ்ச்சி (சிஏஎம்) என்ற விஞ்ஞான பூர்வமான நடவடிக்கை மூலம் தடுத்து உள்ளனர். சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைகோள்கள் மற்ற விண்கலங்களோடு அல்லது விண்வெளி குப்பைகளுடன் மோதும் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *