போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, பாஜக மாநில தலைவரும் , முன்னால் IPS அதிகாரியுமானஅண்ணாமலை மிரட்டல்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

இன்ஸ்பெக்டருக்கு அண்ணாமலை மிரட்டல்

உசிலம்பட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வழியாக நேற்று தேனி சென்றார். அப்போது அவர், உசிலம்பட்டி ஐந்துகல்ராந்தலில் உள்ள தேவர் சிலை, மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க காரிலிருந்து இறங்கினார். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரன், அவரிடம் பணிவாக இதற்கு அனுமதியில்லையென கூறினார். உடனே ஆவேசமடைந்த அண்ணாமலை காரிலிருந்து இறங்கி இன்ஸ்பெக்டரை விரலை உயர்த்தி முறைத்தபடியே மிரட்டினார். பின்னர் அவர் தனது தொண்டர்களுடன் சேர்ந்து சிலைகளுக்கு மாலை அணிவித்து சென்றார். பொது இடத்தில் இன்ஸ்பெக்டரை, ஐபிஎஸ் முடித்த அண்ணாமலையே மிரட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *