ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தாருடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு குடிபெயர முடிவா💥✍️ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

குடும்பத்துடன் லண்டனுக்குப் குடிபெயர முகேஷ் அம்பானி முடிவா?- ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்*

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தாருடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு குடிபெயர்வதாகவும், அங்கு அவர் குடும்பத்துடன் தங்குவதற்காக பிரம்மாண்ட பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அந்தத் தகவல் அடிப்படை ஆதாரமற்றது என முகேஷ் அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

லண்டனின் ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தச் சொத்தை ஒரு தலைசிறந்த கோல்ஃப் மைதானமாக்கி, அதை ஸ்போர்டிங் ரிஸார்டாக மாற்ற வேண்டும் என்பதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் இலக்கு. இதற்காக உரிய விதிமுறைகளை, உள்ளூர் நடைமுறைகளைப் பின்பற்றி இந்தச் சொத்து வாங்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் விருந்தோம்பல் தொழிலை உலகளவில் எடுத்துச் செல்ல வழிவகுக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டோக் பார்க் எஸ்டேட்

அன்டில்லா ஹவுஸ்

முகேஷ் அம்பானி ஆசியாவின் பெரும் பணக்காரர். இவர் மும்பையில் அன்டில்லா ஹவுஸ் என்ற வீட்டில் வசிக்கிறார். 400,000 சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இந்நிலையில் அவர் லண்டனில் பக்கிங்காம்ஷைரில் 300 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை வாங்கியுள்ளார். அந்த இடத்தை முதன்மை இல்லமாக முகேஷ் அம்பானி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *