திருமணமானமனைவியை விவாகரத்து பண்ணு…ஆபாச வீடியோ படத்தை காட்டி தொழிலதிபரை மிரட்டும் கள்ளக்காதலி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

மனைவியை விவாகரத்து பண்ணு…ஆபாச படத்தை காட்டி தொழிலதிபரை மிரட்டும் கள்ளக்காதலி

பெங்களூரு : மனைவி விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள். இல்லையென்றால் ஆபாச படத்தை வெளியிடுவேன் என்று கள்ளக்காதலி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு ஒயிட்பீல்ட் பகுதியில் தொழிலதிபராக இருப்பவர் கிரண்குமார் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு கோரமங்கல பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் சுசித்ரா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் முகநூல் மூலம் அறிமுகமானார். முகநூலில் இருவரும் அடிக்கடி சாட்டிங் செய்து வந்தனர். கிரண்குமாருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தும், அவருடன் சுசித்ரா பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் பெரிய நட்சத்திர ஓட்டல்களில் சந்தித்து பேசினர்.

இதற்கிடையே மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற சமயத்தில், கிரண்குமார் கள்ளக்காதலியுடன் பல நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தார். அப்போது, கிரண்குமாருக்கு தெரியாமல் செல்போனில் சுசித்ரா வீடியோ எடுத்துள்ளார். இதனிடையில் சில மாதங்களுக்கு முன் சுசித்ராவை வீட்டிற்கு அழைத்து வந்த கிரண்குமார், அவரை தொழில் பாட்னர் என்று மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்துள்ளார். இருவருக்கும் தொழில் ரீதியான நட்புறவு இருக்கும் என்று குடும்பத்தினர் கருதினர். இந்நிலையில் சுசித்ரா அவரது வாட்ஸ் ஆப் டிபியில் கிரண்குமாருடன் நெருக்கமாக இருக்கும் சில போட்டோகளை சமீபத்தில் பதிவு செய்திருந்தார்.

இது கிரண்குமாரின் மனைவிக்கு தெரியவந்ததும் குடும்பத்தில் புயல் வீச தொடங்கியது. இப்பிரச்னையில் இருந்து விடுப்பட நினைத்த கிரண்குமார் முகநூல் காதலியை துறக்க முடிவு செய்து தனது நிலையை தெரிவித்துள்ளார். அதையேற்க மறுத்த சுசித்ரா, மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினார். மனைவி மற்றும் காதலி இருவரின் நெருக்கடியில் சிக்கி தவித்த கிரண்குமார் செய்வதறியாமல் தவித்தார்.

அதே சமயத்தில் காதலியை காட்டிலும் மனைவி முக்கியம் என்பதிலும் உறுதியாக இருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தால், இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை சமூக வளைத்தலங்களில் வெளியிடுவாக சுசித்ரா மிரட்டினார். அதற்கும் கிரண்குமார் அசரவில்லை.

இதில் கோபமடைந்த சுசித்ரா பெங்களூரு மாநகர போலீஸ் சார்பில் பெண்கள் நலனுக்காக தொடங்கியுள்ள வனிதா உதவி மையத்தில் கிரண்குமார் மீது புகார் கொடுத்தார். புகார் பதிவு செய்த அதிகாரிகள் கிரண்குமார், சுசித்ரா மற்றும் கிரண்குமாரின் மனைவிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *