புது அத்தியாயம் செய்யும் பேஸ்புக்:✍️மெட்டா என பெயர் மாற்றிய பேஸ்புக்- ✍️காரணம் இதுதானா? நீங்கள் தயாரா?✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

புது அத்தியாயம் செய்யும் நேரம்: மெட்டா என பெயர் மாற்றிய பேஸ்புக்- காரணம் இதுதான்., நீங்கள் தயாரா?*

சமூகவலைதள பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி சமூகவலைதளங்களில் முன்னணியில் பிரதானமாக இருப்பது பேஸ்புக். தற்போது பேஸ்புக்-ன் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. பேஸ்புக்கிற்கு புதிதாக மெட்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டார். பேஸ்புக் நிறுவனம் தனது அடுத்தக்கட்டமான மெய்நிகர் ஆன்லைன் மையமான மெட்டாவெர்ஸ்-க்குள் நுழைய இருக்கிறது.

பேஸ்புக் நிறுவனம் பெயரை மாற்றவதற்கான காரணம் குறித்து பார்க்கையில், நிறுவனம் மெய்நிகர் உலகிற்குள் நுழைய முழு கவனத்தை செலுத்துகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் நிறுவனம் அதன் பெயரை அதை நோக்கி மாற்ற திட்டமிட்டிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் சமீபத்தில் 10000 பணியாளர்களை மெட்டாவெர்ஸ்-க்கு பணியாற்ற நியமிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை பேஸ்புக் தனது ஆண்டு கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது. பெயர் மாறினாலும் தங்களின் செயலிகளும் அதன் பிராண்டுகளும் மாறவில்லை என குறிப்பிட்ட அவர் சமூக பிரச்சனைகளை சந்தித்து போராடி ஏணைய விஷயங்கள் கற்றுக் கொண்டுதாகவும் அதன்மூலம் புதிய அத்தியாத்தை உருவாக்குவதற்கான நேரம் இது எனவும் தெரிவித்தார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் என உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தும் தளமாக இருக்கிறது. பேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை “மெட்டா” என மாற்றுகிறது. நிறுவனம் எதிர்காலத்திற்கான அதன் மெய்நிகர் ரியாலிட்டியை நோக்கி நகர்த்த முயற்சிக்கிறது. சமூகப் பிரச்சனைகளுடன் போராடி கற்றுக் கொண்ட விஷயங்கள் அனைத்தையும் எடுத்து ஒரு அத்தியாத்தை உருவாக்கி உதவுவதற்கான நேரம் இது என டெவலப்பர்கள் மாநாட்டில் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

தொடங்கப்படும் தங்கள் நிறுவனத்தை மெட்டா என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். தங்களன் நோக்கம் அனைத்தும் அப்படியே தான் இருக்கிறது. மக்களை ஒருங்கிணைப்பது, தங்கள் பயன்பாடுகள் பிராண்டுகள் எதுவும் மாறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது பேஸ்புக்., பேஸ்புக் நிறுவனம் திடீரென பெயர் மாற்றப்பட உள்ளதாக தி வெர்ஜ் முன்னதாக குறிப்பிட்டது.

பேஸ்புக் இன்க், மெட்டாவெர்ஸில் கவனம் செலுத்தும் புதிய குழு பெயருடன் தன்னை மறுபெயரிட திட்டமிட்டுள்ளது என வெர்ஜ் தெரிவித்தது. பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகார மார்க் ஜுக்கர் பெர்க், மெய்நிகர் சூழலில் இயங்கக்கூடிய மெட்டாவெர்ஸ் குறித்து கடந்த சில மாதங்களாகவே குறிப்பிட்டு வருகிறார். குழு மெய்நிகர் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி ஆகியவற்றில் அதிக முதலீடு செய்து ஓக்குலஸ் போன்ற வன்பொருளை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

பேஸ்புக் பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில் அதன் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் போன்ற தளங்கள் அதன் தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களாக மாறும் என கூறப்பட்டது. பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றப்படும் பட்சத்தில் ஒரு தாய் நிறுவனத்தின் கீழ் பல தயாரிப்புகளின் முதன்மை பயன்பாடாக இது நிலைநிறுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் இயங்கும் நிறுவனங்கள் பெயரை மாற்றுவது என்பது புதிதல்ல. காரணம் முன்னதாக 2015 ஆம் ஆண்டு ஆல்பாபெட் ஐஎன்சி என்ற தாய் நிறுவனத்தின் கூகுள் போன்ற தளங்கள் கொண்டு வரப்பட்டது. பேஸ்புக் வர்த்தக செயல்பாடுகளால் அமெரிக்க அரசு அதன் கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே பெயர் மாற்ற இருப்பதாக செய்தி வெளியானது.

பேஸ்புக் வணிகம் குழுவிற்கு முக்கியத்துவம் குறைவாக இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் பயனர் பாதுகாப்பு மற்றும் வெறுப்புணர்வை எவ்வாறு கையாளுகிறது என்பதும் ஒழுங்குமுறை, சட்டரீதியான ஆய்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான படத்தை புதுப்பிக்கவும் முயல்வதாக கூறப்படுகிறது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *