இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு கேள்வி? ,தமிழக முதலமைச்சர்கள் ஒருவராவது மக்களை சந்தித்து மனு வாங்கினார்களா

advertisement by google

முதலமைச்சர்களில் ஒருவராவது மக்களை சந்தித்து மனு வாங்கினார்களா?: முதலமைச்சர் பழனிசாமி கேள்வி

advertisement by google

தமிழகத்தில் இருந்த முதலமைச்சர்களில் ஒருவராவது தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மனு வாங்கினார்களா? என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் பழனிசாமி, நாங்கள், எதிர்க்கட்சிகளைபோல் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.
மேட்டூரில் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ‘தமிழகத்தில் இருந்த முதலமைச்சர்களில் ஒருவராவது தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மனு வாங்கினார்களா?.

advertisement by google

பொதுமக்களின் ஒரு மனுவைக் கூட விட்டு விடாமல் படித்து பார்த்து தகுதி உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உதவித்தொகைக்காக அதிக மனு வருகிறது; தமிழகம் முழுவதும் 5 லட்சம் தகுதியுள்ள மனுவுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

advertisement by google

முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டத்தின் நோக்கம் மக்களை தேடி அதிகாரிகளை வரவைப்பது தான். மக்களின் பிரச்னைக்கு தீர்வுகாண்பதில் ஏற்படும் சிரமத்தை குறைக்கவே சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது’ என்றார்.

advertisement by google

மேலும், தமிழகம் முழுவதும் 40,000 ஏரி, குளங்கள் படிப்படியாக தூர்வாரப்படும். கரூரில் காவிரியின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டப்படும்.எதிர்க்கட்சிகளைபோல் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல; நாங்கள் எதை சொல்கிறோமோ அதை செய்து முடிப்போம்’ என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button