தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகம்!

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 169 பேர்கள் போட்டியிட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தேர்தல் வேலை செய்யும் படி மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தேர்தலை சந்தித்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 128 பேர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை போட்டியிட்டவர்களில் 13 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள். தற்போது தேர்தல் ரிசல்ட் வந்துவிட்டது. விஜய் மக்கள இயக்கத் தலைமைக்கு இதுவரை கிடைத்த தகவல் படி, போட்டியிட்டவர்களில் 115 பேர் வெற்றிபெற்றதாகத் தகவல்.

பொதுச்செயலாளர் புஸ்ஸு ஆனந்திடம் பேசியபோது, ” போட்டியிட்ட இடங்கள் 169. போட்டியின்றி வென்றவர்கள் 13 பேர். தேர்தலில் களம் இறங்கி வென்ற வார்டு உறுப்பினர்கள் 101. விழுப்புரம் மாவட்டம் எரையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எங்கள் இயக்க நிர்வாகி வெற்றிபெற்றிருக்கிறார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிறைய பேர் தோற்றிருக்கின்றனர். திருப்பத்தூர் அருகே வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு பெண் நிர்வாகி, ஒரு ஒட்டு வித்தியாத்தில் தோற்றுவிட்டார். இரண்டு ஒட்டு வித்தியாத்தில் தோற்றவரும் உண்டு. இன்னொரு ஊரில் சம ஒட்டு வாங்கியதால், குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் எங்கள் நிர்வாகி தோற்றுப்போனார். வெற்றிபெற்றவர்களில் 47 பேர் பெண்கள். தளபதி விஜய்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ” என்றார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *