கோவில்பட்டியில் தனியார் ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி உணவு சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழப்பு – போலீசார் விசாரணை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி வைத்து உணவு சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழப்பு – போலீசார் விசாரணை

கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம்(34) மற்றும் அவரது மகள் தர்ஷினி (7) இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது லேசான வயிர் எரிச்சல் ஏற்படவே அருகில் இருந்த கடையில் 10 ரூபாய் விலையில் உள்ள குளிர்பானத்தினை வாங்கி குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்துள்ளனர். இதையடுத்து உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லமால் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் இருவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *