மஹாராஷ்ரா வில் டீசல் பஸ்கள் அவ்ளோதான்… இனி அம்புட்டும் எலெக்ட்ரிக் பஸ்ஸா ஓடப்போகுது… இந்த ஊர்க்காரங்க குடுத்து வெச்சவங்க✍️தமிழகத்தில் மாற்றம் வருமா✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

டீசல் பஸ்கள் அவ்ளோதான்… இனி அம்புட்டும் எலெக்ட்ரிக் பஸ்ஸா ஓடப்போகுது… இந்த ஊர்க்காரங்க குடுத்து வெச்சவங்க!

காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக அதிரடியான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் பெஸ்ட் நிறுவனம் (Brihanmumbai Electric Supply and Transport – BEST) பேருந்து சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் வரும் 2028ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் பேருந்துகளாக இருக்கும் என மஹாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே தற்போது தெரிவித்துள்ளார்.

பெஸ்ட் நிறுவனத்திற்கு புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் அனைத்து எலெக்ட்ரிக் பேருந்துகளாக இருக்கும் எனவும் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். இதன் மூலம் எலெக்ட்ரிக் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, வரும் 2028ம் ஆண்டிற்குள், இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் எலெக்ட்ரிக் பேருந்துகளாக இருக்கும்.

அதே நேரத்தில் மும்பை நகரில் எலெக்ட்ரிக் அல்லது ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்கள் மூலம் டபுள்-டக்கர் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பை பருவ நிலை மாற்ற செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மும்பை மட்டுமல்லாது, மஹாராஷ்டிரா முழுவதும் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்வதுடன், அவற்றுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களையும் பெஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது. எலெக்ட்ரிக் பேருந்துகளை சார்ஜ் செய்வதற்கு மும்பை நகரில் ஏற்கனவே 55 இடங்களை பெஸ்ட் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. மும்பை நகரில் ஏற்கனவே நிறைய எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த எண்ணிக்கை வரும் நாட்களில் படிப்படியாக அதிகரிக்கப்படவுள்ளது. மும்பை போன்ற ஒரு சில நகரங்களில் எலெக்ட்ரிக் பேருந்துகளின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ் நாட்டில் எலெக்ட்ரிக் பேருந்துகள் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இன்னும் பெரிய அளவில் ஊக்கம் அளிக்கப்படாமல் இருக்கிறது.

அந்த குறையை தமிழ் நாடு அரசு விரைவில் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்காலம். பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை சிறந்த முடிவாக உலக நாடுகள் கருதுகின்றன. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காகவும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது போக்குவரத்தை எலெக்ட்ரிக் மயமாக்குவதில் உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன.

இதன் மூலம் பேருந்துகளை இயக்குவதற்கான செலவு குறைந்து, போக்குவரத்து கழகங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம் என்பது போன்ற குறைகள்தான் பெரிதாக இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளின் விலை அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

ஆனால் எதிர்காலத்தில் லித்தியம் அயான் பேட்டரிகளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறையலாம். மேலும் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் உள்பட ஏராளமான சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.

இந்த சலுகைகள், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை எளிமையாக்கும். இந்தியாவை பொறுத்தவரை தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகளவில் அறிமுகமாகி வருகின்றன. டிவிஎஸ் ஐ-க்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450எக்ஸ், ஓலா எஸ்1 மற்றும் சிம்பிள் ஒன் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதுதவிர ஒரு சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் அமோக வரவேற்பு காணப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, டாடா டிகோர் எலெக்ட்ரிக், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *