தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் டிராக்டரில் உள்ள சட்டி கலப்பை மற்றும் காப்பர் ஒயரை திருடியவர் கைது✍️ – ரூபாய். 20,000/- மதிப்புள்ள சட்டிக்கலப்பை பறிமுதல் .✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

03.10.2021 தேதி தூத்துக்குடி மாவட்டம்

விளாத்திகுளத்தில்

டிராக்டரில் உள்ள சட்டி கலப்பை மற்றும் காப்பர் ஒயரை திருடியவர் கைது – ரூபாய். 20,000/- மதிப்புள்ள சட்டிக்கலப்பை பறிமுதல் .*

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயன் பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்த வித்ய சேரபாண்டியன் மகன் அகிலன் (51) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டர் வைத்து உழவு செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24.08.2021 அன்று இரவு உழவு வேலை முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள தனது குடோனுக்கு அருகில் நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். மறுநாள் (25.08.2021) காலை அகிலன் சென்று பார்க்கும்போது டிராக்டரில் இருந்த ரூபாய். 20,000/- மதிப்புள்ள சட்டி கலப்பையை காணவில்லை எனத் தெரியவந்ததும் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். சட்டிக் கலப்பை கிடைக்காமல் போக நேற்று (02.10.2021) அகிலன் அளித்த புகாரின் பெயரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.*

அதேபோன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் சலையம் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் மாரியப்பன் (61) என்பவர் ஜமீன் கரிசல் குளத்தில் சொந்தமாக தோட்டம் வைத்துள்ளார். இந்தப் தோட்டத்தில் கடந்த 25.08.2021 அன்று காலை மேற்படி மாரியப்பன் சென்று பார்க்கும் பொழுது, தோட்டத்தில் மின்சார மோட்டாருக்கு பயன்படுத்தும் காப்பர் ஒயரில் 120 மீட்டர் காப்பர் ஒயர் காணாமல் போயுள்ளது. மேற்படி காணாமல் போன காப்பர் ஒயரை அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் மேற்படி மாரியப்பன் இன்று (03.10.2021) அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.*

இச்சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி காணாமல்போன சட்டி கலப்பை மற்றும் காப்பர் ஒயரை திருடியது ஒரே நபரான அயன் பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்த நீலகண்டன் மகன் முனியசாமி (57) என்பது தெரியவந்தது, உடனே மேற்படி போலீசார் எதிரி முனியசாமியை கைது செய்து அவரிடம் இருந்த சட்டிக்கலப்பையை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *