ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரிய அப்பல்லோ ஆஸபத்திரியின் மனு மற்றும் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரிய தமிழக அரசின் இடையீட்டு மனு✍️ ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை வழக்கை தள்ளிவைக்க தமிழக அரசு எதிர்ப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை வழக்கை தள்ளிவைக்க தமிழக அரசு எதிர்ப்பு

புதுடெல்லி,

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரிய அப்பல்லோ ஆஸபத்திரியின் மனு மற்றும் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரிய தமிழக அரசின் இடையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் ஆஜராகி, இன்று இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டால், விசாரணை இன்று நிறைவுறாது அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்படும். அடுத்த வாரம் தனிப்பட்ட சில பணிகள் காரணமாக இந்த வழக்கில் தன்னால் ஆஜராகாத நிலை உள்ளது எனவே தசரா விடுமுறைக்குப்பிறகு இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே ஆட்சேபம் தெரிவித்ததுடன், இந்த மனுக்கள் மீதான விசாரணை 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த மனுக்களை விசாரிக்க சிறிது நேரமே போதுமானது. ஆனாலும் ஏன் இந்த மனுக்கள் விசாரிக்கப்படாமல் உள்ளன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. விசாரணையில் வாதங்களை முன்வைக்க முன் தயாரிப்புடன் வர வேண்டும் என வாதிட்டார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இந்த மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.

அக்டோபர் 20-ந்தேதி நடைபெறும் விசாரணையில் இந்த வழக்கை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *