பயங்கர ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவிட்டவர் ஸ்ரீவைகுண்டம் அருகே கைது ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

பயங்கர ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவிட்டவர் ஸ்ரீவைகுண்டம் அருகே கைது

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநாபமங்கலம் மறுகால் மடை அருகே ரோந்து சென்றபோது போலீசாரைப் பார்த்ததும் அரிவாளுடன் ஓடியுள்ளார். அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் ஸ்ரீவைகுண்டம், வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் அமச்சார் (26) என்பதும், முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்வதற்காக செல்வதும் விசாரணை தெரியவந்தது.

தொடர்ந்து விசாரித்தபோது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் அரிவாள், வாள் வைத்து மிரட்டுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த அரிவாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *