மதுபோதையில் அட்டகாசம்.. பேருந்தின் முன்பக்க கண்ணாடியை பதம்பார்த்த குடிமகன்✍️மதுபோதை ஆசாமி கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

மதுபோதையில் அட்டகாசம்.. பேருந்தின் முன்பக்க கண்ணாடியை பதம்பார்த்த குடிகாரன்.!

பேருந்தின் முன்புற கண்ணாடியை உடைத்த மதுபோதை ஆசாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள செங்குன்றத்தில் இருந்து ஆவடி நோக்கி, நேற்று முன்தினம் இரவு 61 ஆவது தடம் எண் கொண்ட மாநகர பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

பேருந்து ஆவடி அருகேயுள்ள கோவில் பதாகை பெருமாள் கோவிலருகே செல்கையில், அங்குள்ள மதுபானக்கடையில் மதுபானம் அருந்திவிட்டு வந்த வாலிபர், திடீரென சாலையோரம் இருந்த கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடியை நோக்கி வீசியுள்ளார்.

இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. நல்ல வேலையாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விஷயம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் சிவா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஜெயசீலன் (வயது 26) என்பது தெரியவரவே, அவனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *