தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

கோவில்பட்டி அரசு மருத்துமனையில் திறந்த வெளியில் கர்பிணிகள்✍️பிரசவலி வந்தால் மட்டுமே படுக்கை✍️நடவடிக்கை எடுக்குமா அரசு??✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி மருத்துமனையில் திறந்த வெளியில் கர்பிணிகள்..!! வலி வந்தால் மட்டுமே படுக்கை…!!நடவடிக்கை எடுக்குமா அரசு??…!!*

advertisement by google

கோவில்பட்டி மருத்துவமனையில் படுக்கைவசதி இன்றி கர்பிணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

advertisement by google

தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தொழில் நகரமாக உள்ளது. சுற்று வட்டாரத்தில் முக்கிய நகரமாக உள்ளது. அங்குள்ள மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் மருத்துவ தேவைக்கு கோவில் பட்டி அரசு மருத்துவமனையை நம்பியுள்ளனர்.இந்நிலையில், அங்கு பிரசவத்திற்கு நன்கு சிகிச்சையளிக்கபடுவதால் தினமும் நூற்று கணக்கான கர்பிணிகள் அங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

advertisement by google

இந்நிலையில், அங்கு போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தால் கர்பிணிகளை பார்வையாளர்கள் தங்கும் ஷெட்டில் அமர்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மழை வெய்யில் என அனைத்திலும் அவர்கள் அங்கேயே இருப்பதால் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

advertisement by google

கோவில்பட்டி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் தங்க கூடாது என்பதற்காக மத்திய அரசு உதவியுடன் 40 லட்சம் ரூயாயில் தனிகட்டிடம் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. மேலும், கொரோனா சிறப்பு வார்டாகாவும் செயல்பட்டது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் அந்த கட்டித்தை திறக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அந்த கட்டிடம் மாநகராட்சிக்கு சொந்தமானதால் அது திறப்பது குறித்து நகராட்சி நிர்வாகமும், மருத்துவமனை நிர்வாகமும் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

advertisement by google

அதுமட்டுமின்றி, குப்பைகளை அந்த பகுதியில் எறிப்பதால் கர்பிணிகள் நஞ்சு புகையை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில், புதியாதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது அந்த பணிகள் விரைவில் முடிவடையும் பட்சத்தில் அதிக படுக்கைகள் கிடைக்கும் என தெரிவித்தார். மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கையில், மருத்துவமனையின் அலட்சிய போக்கால் கட்டிடம் திறக்கபடுவதில் தாமதம் ஏற்படுள்ளது. விரைந்து கட்டிடத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

advertisement by google

மாறி மாறி குறைகூறாமல் 40 லட்சம் மதிப்பில் இருக்கும் கட்டிடத்தை திறக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button