இந்தியாதமிழகம்

கொங்கு நாடா, தலை சுற்றுகிறது, நடிகர் வடிவேலு கிண்டல்✍️முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் வடிவேலு✍️முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலை வழங்கல்✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

கொங்கு நாடா, தலை சுற்றுகிறது: நடிகர் வடிவேலு*

advertisement by google

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிக்கு உதவும் வகையில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சத்தை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் வடிவேலு வழங்கினார். முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் வடிவேலு கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார்.

advertisement by google

செய்தியாளர்களிடம் வடிவேலு பேசியதாவது:

advertisement by google

முதல்வரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். மிகவும் எளிமையாக, குடும்பத்தில் ஒருவரைப் போல என்னிடம் பேசினார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளேன்.

advertisement by google

அதிகமான படங்களில் இனி என்னைப் பார்க்கலாமா எனக் கேட்கிறீர்கள். திரைப்படங்களிலும் ஓடிடியிலும் நான் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கண்டிப்பாக. நல்லதே நடக்கும்.

advertisement by google

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் விதத்தில் கரோனாவை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். மக்களுக்கு மெய்சிலிர்க்கிறது. அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் எனக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து அவர்களைத் தன்வசப்படுத்தினார். மக்களே ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அளவுக்கு முதல்வர் பேசியது எங்களுக்கு எல்லாம் நெகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு திட்டங்களையும் அழகாக நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது மக்களுக்கு இது பொற்கால ஆட்சியாக இருக்கும். நான் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டேன். இன்னும் 40 தடுப்பூசிகள் போடச் சொன்னாலும் போட்டுக்கொள்வேன். அந்தளவுக்குப் பீதியாக உள்ளது. அனைவரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

advertisement by google

கொங்கு நாடு சர்ச்சை பற்றி கேட்கிறீர்கள். ராம் நாடு, ஒரத்தநாடு எல்லாம் ஏற்கெனவே உள்ளன. தமிழ்நாடு நன்றாக உள்ளது. அதை ஏன் பிரிக்கவேண்டும்? நான் அரசியல் பேசவில்லை. அது வேண்டாம். இதையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது என்று பேசினார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button