t

பாதிக்கப்பட்ட மாணவிகள், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு வாக்குமூலம்✍️ மாணவிகள் கூறியதை கேட்டு நீதிபதியே கலங்கம்✍️மாணவி கூறும்போது, ” என்னை மூன்று முறை பாபாவின் அறைக்கு அழைத்து சென்று,ஆடைகளை களைத்து துன்புறுத்தல்✍️ கதறி அழுதும் விடல ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

‘கதறி அழுதும் விடல” மாணவியின் கண்ணீர் வாக்குமூலம்: கலங்கிப்போன பெண் நீதிபதி..!*

advertisement by google

பாபா கைது:

advertisement by google

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகள் பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் போலி சாமியார் சிவசங்கர் பாபாவை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே அவர் உடல்நல குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

advertisement by google

சிவசங்கர் பாபா சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வாக்குமூலத்தை பெற்று ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் செங்கல்பட்டு சிபிசிஐடி பொறுப்பு அதிகாரி எஸ்பி விஜயகுமார் தலைமையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

advertisement by google

முன்னதாக, இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் பாரதி, தீபா மற்றும் சிவசங்கரின் சிஷ்யை சுஷ்மிதா ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், , பள்ளியின் கணினி பிரிவு ஆசிரியர் கருணா, ஹாஸ்டல் வார்டன் நீரஜா, சிஷ்யை சுஷ்மிதா ஆகியோர் மீது கடும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இதில் சுஷ்மிதா மட்டும் கைதாகி சிறையில் உள்ளார். ஆசிரியர் கருணா, ஹாஸ்டல் வார்டன் நீரஜா ஆகியோர் மட்டும் விசாரணை கட்டுப்பாட்டில் உள்ளனர். ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை இரண்டு பெண்கள் செய்த அக்கிரமங்கள் பெற்றோர்களை கடும் கோபத்தில் ஆழயோத்தியுள்ளது.

advertisement by google

ஆசிரியர் கருணா

advertisement by google

கம்ப்யூட்டர் பாடம் எடுப்பதற்கு பதிலாக, சிவசங்கர் பாபாவை பற்றியே பாடம் எடுத்து வந்துள்ளார் இந்த கருணா. மேலும், பாபாவிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்தால் பிறவி பலனை அடையலாம் என்றெல்லாம் கூறி, 70 வயதாகும் சிவசங்கர் படுக்கைக்கு மாணவிகளை தள்ள முயற்சித்துள்ளார். அதேபோல, இரவு நேரத்தில் ஹாஸ்டலில் உள்ள மாணவிகளை குளிப்பாட்டி பாபாவின் சொகுசு அறைக்கு அழைத்து செல்லும் கேவலத்தையும் ஹாஸ்டல் வார்டன் நீரஜா செய்து வந்துள்ளாராம்.

advertisement by google

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி அம்பிகா முன்பு வாக்குமூலத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அப்போது, மாணவிகள் கூறியதை கேட்டு நீதிபதியே கலங்கியுள்ளார். அதில் ஒரு மாணவி கூறும்போது, ” என்னை மூன்று முறை பாபாவின் அறைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு வைத்து என் ஆடைகளை களைத்து துன்புறுத்தினார்கள் என்றும் கதறி அழுதும் என்னை விடவில்லை’ என்று மாணவி தெரிவித்துள்ளார்.

அதுபோல, ஹாஸ்டல் வார்டன் நீரஜாவுக்கு பாபா போன் போட்டு மாணவியை அழைத்து வர சொன்னால், நடு ராத்திரியில் அத்தனை குளிரில் மாணவிகளை குளிப்பாட்டி பாபாவின் சொகுசு அறைக்கு அழைத்து செல்வார் என்று மாணவிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மாணவிகளின் நேரடி வாக்குமூலத்தினால் மேற்கொண்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஆசிரியை கருணா, நீரஜா உள்ளிட்டோர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்களாம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button