உலக செய்திகள்விவசாயம்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி, துபாய்க்குச் செல்லும் கமலம் பழம் (டிராகன் புரூட் )✍️வளர்வதற்கு குறைவான தண்ணீர் மட்டும் போதுமா✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

ஏற்றுமதி: துபாய்க்குச் செல்லும் கமலம் பழம்!

advertisement by google

சமீபத்தில் கமலம் பழம் என்று பெயர் வைக்கப்பட்ட டிராகன் புரூட், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழகம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற இடங்களில் விளைகிறது. இந்தப் பழம் வளருவதற்கு குறைவான தண்ணீர் போதுமானது என்பதாலும், பல்வேறு வகையான மண்களில் வளரும் தன்மை கொண்டதாலும் இவற்றைத் தற்போது விவசாயிகள் அதிகமாகப் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

advertisement by google

2020ஆம் ஆண்டு ஜூலை மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் டிராகன் புரூட் பழத்தின் உற்பத்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இந்த டிராகன் புரூட் பழங்களின் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர், குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதி விவசாயிகள் இவற்றை அதிகமாக விளைவித்து வருவதைப் பாராட்டினார். இப்பழங்களின் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் தற்போது துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

ஜூலை முதல் இதெல்லாம் மாறப்போகுது… ஏடிஎம் ரூல்ஸ் மாற்றம்!!

advertisement by google

மகாராஷ்டிர மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள தடாசர் என்ற கிராமத்தில் இருக்கும் விவசாயிகளிடமிருந்து இப்பழங்கள் கே.பி. நிறுவனத்தால் பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இப்பழங்களை விவசாயிகள் அதிகமாக ஏற்றுமதி செய்வதற்காக APEDA எனப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்றுமதிக்கான வர்த்தக உள்கட்டமைப்பு திட்டம், சந்தை அணுகல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் இந்த வாரியம் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button