t

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவணர் ,சிவசங்கர் பாபாவுக்கு, உல்லாசத்திற்கு ,இரவில் மாணவிகளை அழைத்து சென்ற பெண் ஆசிரியைகள் மீது போக்ஸோ!✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

இரவில் சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை அழைத்து சென்ற பெண் ஆசிரியைகள் மீது போக்ஸோ!

advertisement by google

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை அருகே சுமார் 64 ஏக்கரில் அமைந்துள்ளது சுஷில் ஹரி பள்ளி. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா என்கின்ற சிவசங்கர் மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்ததன் அடிப்படியில் மாமல்லபுரம் போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

advertisement by google

தொடர்ந்து குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரிடையாக பள்ளியில் விசாரணையை முடுக்கியுள்ளனர். இது தொடர்பாக பள்ளி வார்டன், ஆசிரியர், நிர்வாக ஆலுவலகர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் முக்கிய குற்றவாளியான சிவசங்கர் பாபா சென்னையில் இருந்து தப்பியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்ததில், இதய பாதிப்பு காரணமாக சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இந்நிலையில் வழக்கின் தீவிரத்தை கருத்தில்கொண்டு பாலியல் புகாரில் சிக்கியுள்ள போலி பாபாவை மாநிலம் விட்டு மாநிலம் சென்று விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை தமிழக டிஜிபி திரிபாதி சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

advertisement by google

இளம்பெண் திட்டமிட்டுக் கொலை… அதிர்ச்சி சம்பவத்தில் நான்கு பேர் கைது..!

advertisement by google

அவரை விசாரித்து கைது செய்யும் நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீசார் டேராடூன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை சிவசங்கர் பாபாவுக்கு பணிவிடை செய்து வந்த பெண் ஆசிரியைகள் மீதும் மூன்று மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர்.

advertisement by google

குறிப்பாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை அந்த ஆசிரியைகள் இரவு நேரத்தில் சிவசங்கர் பாபாவின் ஆடம்பர குடியிருப்புக்கு மாணவிகளை மூளை சலவை செய்து அழைத்து வரும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் சுஷில் ஹரி பள்ளியின் தீபா, பாரதி ஆகிய இரண்டு ஆசிரியைகள் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button