உறவுகள்

உங்கள் அந்தரங்க வாழ்க்கை,குடும்ப இல்லற உறவுகளை, உங்கள் வேலைப்பழு அழிக்கிறது என்பதற்கான 7 அறிகுறிகள்..!✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையே ஒரு சமநிலையை பராமரிப்பது என்பது தாம்பத்திய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இந்த இரண்டு நிலைகளும் சமமாக பராமரிக்கப்படவில்லை என்றால், அது இரண்டு படகுகளில் கால் வைத்து சவாரி செய்வதற்கு சமம். மேலும், இப்போதைய கொரோனா நெருக்கடியில் உலகம் முழுவதும் பணிபுரியும் எண்ணற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதால், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது கடினமாகி வருகிறது.

advertisement by google

அந்தளவுக்கு பிஸியான வேலை அட்டவணை ஏராளமான மக்களின் உறவுகளை பாழாக்கிவிட்டது. இதேபோன்ற சூழ்நிலையை நீங்கள் சந்திக்க விரும்பவில்லை என்றால், உங்கள் வேலை உங்கள் உறவை அழிக்கிறது என்பதற்கான 7 அறிகுறிகள் குறித்து அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் உங்கள் வேலை மற்றும் உறவு ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யலாம்.

advertisement by google

உங்கள் உறவின் ரியாலிட்டியை தவிர்க்கலாம்:

advertisement by google

உங்கள் அன்புக்குரியவர் உங்களை நோக்கி கண்களால் சைகை செய்வதையும் அல்லது படுக்கையறையில் உங்களை ஒதுக்குகிறார்கள் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஆனால் நீங்கள் இந்த சமிக்ஞைகளை புறக்கணித்தாலோ அல்லது அவர்களின் கவலைகளை நீங்கள் கவனிக்கவில்லை என்றாலோ உறவில் விரிசல் ஏற்படும். உங்கள் உறவின் நிலை குறித்து நீங்கள் உண்மையாக இருக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரியும்.

advertisement by google

உங்கள் உறவை விட வேலைக்கே முன்னுரிமை கொடுப்பீர்கள்:

advertisement by google

வழக்கமாக உங்கள் மனைவியுடன் சேர்த்து திரைப்படத்திற்கு செல்வது, நண்பர்களைப் பார்ப்பது, அல்லது இருவரும் சேர்த்து ஒன்றாக நேரத்தை செலவிடுவது போன்ற விஷயங்களை தற்போது தவிர்த்து வருகிறீர்கள் என்றால் அது காட்டாயம் உங்கள் உறவை எதிர்மறையாக பாதிக்கும். இது உறவில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

advertisement by google

உங்களுடன் நேரம் செலவிட வேண்டும் என உங்கள் மனைவி ஆசைப்படுவார்:

advertisement by google

உங்கள் மனைவி உங்களின் கவனத்தை ஈர்க்க இறுதி எச்சரிக்கைகளை அளித்தாலோ, அல்லது அவர்களின் கவலைகளை தீவிரமாக வெளிப்படுத்தினாலோ, அவர்கள் உங்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற தேவையை தெரிவிக்கிறார் என்பதற்கான தெளிவான குறிகாட்டியாகும். இது அப்படியே நீண்டால் உறவுக்கு பங்கம் ஏற்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் அன்புக்குரியவர், தன்னால் இந்த உறவை கையாள முடியாது என்று நினைக்கும் வரை உறவை இதோடு முடித்துக்கொள்ளலாம் என்று உங்களை அச்சுறுத்த மாட்டார்கள். எனவே, நீங்கள் அவர்களின் கவலையை அறிந்து உங்களில் சில மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

வேலையைத் தவிர உங்கள் மனையிடம் பேச எதுவும் இருக்காது:

வேலையைத் தவிர உங்கள் மனைவியுடன் பேசுவதற்கு உங்களுக்கு எதுவும் இல்லை என்றால், இது ஒரு மிகவும் மோசமான அறிகுறி. வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பிரிப்பதில் சிக்கல் இருந்தால், நீங்கள் அதை உணராமல் சகாக்கள் குறித்தும் மற்றும் அலுவலகத் திட்டங்களைப் பற்றிய விவாதங்களுக்குச் செல்வீர்கள். அது உங்கள் உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தலாம்.

உங்கள் மனைவியுடன் நீங்கள் அதிகம் வாதிடலாம்:

அலுவலகத்திலிருந்து வந்தவுடன் வீட்டில் உள்ள மனஅழுத்தத்தையும் சேர்த்து சுமக்கிறீர்கள் என்றால், நீங்கள் மிகவும் எரிச்சலடைந்து, முற்றிலும் தொடர்பில்லாத விஷயங்களுக்கு கூட உங்கள் அன்புக்குரியவரிடம் சண்டையோ அல்லது வாதிடவோ செய்யலாம். இந்த சூழ்நிலையில் உங்கள் மன அழுத்தத்தை நீக்குவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது மிக அவசியம், எனவே உங்கள் காதல் மனைவியை நீங்கள் இழக்கமாடீர்கள்.

ஓவர்டைம் வேலை பார்த்தால் உயிருக்கே ஆபத்தா..?ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

வேலை உங்கள் ஆற்றலையும் அணுகுமுறையையும் பாதிக்கும்:

வேலையில் மிகவும் பரபரப்பான ஒரு நாளுக்குப் பிறகு, உங்களில் மிகக் குறைந்த ஆற்றல் மட்டுமே இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் முதலாளி உங்களை நன்றாக நடத்தாத சூழலில் இருந்தாலோ அல்லது உங்கள் சக ஊழியர்கள் நச்சுத்தன்மையுள்ளவராக இருக்கும் ஒரு எதிர்மறை சூழலில் நீங்கள் பணிபுரியும் போது, நீங்கள் குறைந்து கொஞ்சமாவது எதிர்மறை எண்ணங்களோடு இருப்பீர்கள். காலப்போக்கில், இது உங்கள் வழக்கமான நடத்தையின் ஒரு பகுதியாக மாறும்.

உங்களை சமூகமயமாக்க விரும்பமாடீர்கள்:

உங்கள் மனம் ஏதோ ஒரு தொலைதூர இடத்தில் இருப்பதாக நீங்கள் உணர ஆரம்பித்தால், அது ஒரு நல்ல அறிகுறி அல்ல. நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன், அல்லது வார இறுதிக்குள் கூட நீங்கள் வேலையில் ஈடுபடுகிறீர்களானால், உங்கள் மனைவியுடன் சாதாரண சமூக நடவடிக்கைகளில் கூட உங்களால் ஈடுபட முடியாமல் போகலாம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button