t

பெங்களூருவில் ஆண்லைன் உணவு டெலிவரி செய்யச் சென்ற ஊழியரை, இலவசமாக உணவை வழங்கிச் சொல்லி நான்கு நபர்கள் அடித்து காயப்படுத்தி துன்புருத்தல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பெங்களூரு: “ஃப்ரீயாக சாப்பாடு கொடுத்துட்டு போ” – மறுத்த டெலிவரி ஊழியர் மீது தாக்குதல்

advertisement by google

பெங்களூருவில் உணவு டெலிவரி செய்யச் சென்ற ஊழியரை, இலவசமாக உணவை வழங்கிச் சொல்லி நான்கு நபர்கள் அடித்து காயப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

பெங்களூருராஜாஜி நகரில் வசித்து வந்த வாடிக்கையாளர் ஒருவர் கடந்த மே 28 ஆம் தேதி தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன தளத்தில் உணவை ஆர்டர் செய்து பின்னர் அதனை ரத்து செய்துள்ளார். ஆனால் அந்த ஆர்டர் ரத்தாகவில்லை. இதனையடுத்து ஆர்டர் செய்த உணவை அந்நிறுவன டெலிவரி ஊழியர் கார்த்திக் வாடிக்கையாளரிடம் கொடுக்கச் சென்றுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த உணவை இலவசமாக தந்துவிட்டுச் செல்லுமாறு கார்த்திக்கை அந்த நபர் வற்புறுத்தியுள்ளார்.

advertisement by google

ஆனால் அதனை கார்த்திக் மறுத்ததாகத் தெரிகிறது. மேலும் உணவுக்கான பணம் கிடைக்காத நிலையில், கார்த்திக் அந்த உணவை உதவித்தேவைப்படும் நபருக்கு கொடுக்க முடிவெடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கு கூடிய நான்கு நபர்கள் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். கார்த்தியும் எதிர்தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. ஆனால் தாக்குதல் நடத்திய அந்த நபர்கள் கற்களை கொண்டு கார்த்திக்கை தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கார்த்திக் இரத்தத்துடன் மயக்கமடைந்துள்ளார். கார்த்திக்கின் போன், ஹெல்மெட், பைக் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திய அந்தக்குழு தனது தங்கைக்காக கார்த்திக் சேகரித்து வைத்த 1800 ரூபாயையும் எடுத்துச் சென்றுள்ளனர்

advertisement by google

நல்வாய்ப்பாக சக உணவு டெலிவரி ஊழியர்கள் கார்த்திக்கை அடையாளம் கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை வசிம் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கார்த்திக்கிற்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார். அதனைத்தொடர்ந்து பலரும் கார்த்திக்கிற்கு தன்னால் இயன்ற நிதியை அளித்துள்ளனர். அதற்கு நன்றியை தெரிவித்துள்ளார் அவர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button