இந்தியா

நாடு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு டுவிட்டர் நீல டிக்கிற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது என காங்., எம்.பி., ராகுல்காந்தி காட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

டுவிட்டர் நீல டிக்கிற்காக சண்டை போடுகிறது மத்திய அரசு: ராகுல் விமர்சனம்

advertisement by google

புது டில்லி: நாடு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு டுவிட்டர் நீல டிக்கிற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது என காங்., எம்.பி., ராகுல் சாடியுள்ளார்.

advertisement by google

டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு போன்ற பல்துறை பிரபலங்கள், முக்கியஸ்தர்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு, பெயருக்கு பின்னால் நீல நிற குறியீடு இடப்படும். இதன் மூலம் அவர்கள் பெயரில் கணக்கு தொடங்கி மோசடி செய்வது, போலி செய்தி பகிர்வது தடுக்கப்பட்டது. சமீபத்தில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளிலிருந்து நீல நிற டிக் நீக்கப்பட்டது.

advertisement by google

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையானது. ஏற்கனவே மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுடன் முரண்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது டுவிட்டர். இந்நிலையில் அரசுக்கு நெருக்கமானவர்களின் டுவிட்டர் கணக்குகளில் கைவைத்ததாக சலசலப்பு எழுந்தது. இதற்கு விளக்கமளித்த டுவிட்டர் செய்தித் தொடர்பாளர், அவர்களின் கணக்குகள் பல மாதங்களாக செயல்படாமல் இருந்ததால் தானாகவே நீல நிற டிக் நீக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அதனை சேர்த்துள்ளோம் என்றார்.

advertisement by google

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்., எம்.பி., ராகுல், மோடி அரசு நீல நிற டிக்கிற்காக சண்டை போடுவதாகவும், கோவிட் தடுப்பூசிக்காக சுயசார்புடன் இருப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button