t

யூனிஃபார்ம கழட்ட வச்சுடுவேன்’: போலீஸை மிரட்டிய ‘சொர்ணாக்கா✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

யூனிஃபார்ம கழட்ட வச்சுடுவேன்’: போலீஸை மிரட்டிய ‘சொர்ணாக்கா’!*

advertisement by google

ஹைலைட்ஸ்:

advertisement by google

நான் அட்வகேட்டு, உன் யூனிபார்ம கழட்ட வச்சுடுவேன்

advertisement by google

போலீசாரை மிரட்டிய பெண் மீது போக்குவரத்து காவலர் ரஜித்குமார் புகார்

advertisement by google

அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் அப்பெண்ணின் மீது வழக்குப்பதிவு

advertisement by google

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மருத்துவம் போன்ற அவசர காரணங்களுக்காக பொது மக்கள் வெளியே செல்வதற்கு இபதிவு கட்டாயம் என்றும், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், தேவையில்லாமல் வெளியே செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

advertisement by google

இதனை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

advertisement by google

அப்போது, அவ்வழியே காரில் வந்த பெண்களை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். எங்கே செல்கிறீர்கள் என்றும், முகக்கவசம் அணியவில்லை அதற்கு அபராதம் செலுத்துங்கள் என்று போலீசார் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அப்பெண்ணில் ஒருவர், போலீசாரை ஒருமையில் பேசத்தொடங்கினார். ‘நான் அட்வகேட்டு, உன் யூனிபார்ம கழட்ட வச்சுடுவேன்’ என்று அப்பெண் போலீசாரை ஒருமையில் மிரட்டிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதுதான் சரக்கு லாரியோ..? கர்நாடகாவில் இருந்து கடத்தப்பட்ட 3,408 மது பாட்டில்கள் பறிமுதல்!

அதன் தொடர்ச்சியாக, சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசாரை மிரட்டிய பெண் மீது போக்குவரத்து காவலர் ரஜித்குமார் அளித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்கு காவல்நிலையத்தில் கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் அப்பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button