40,000 வருடங்களுக்கு முன்பாக உயிர் வாழ்ந்த அரியவகை மிருகம்? கிடைத்தது ஆதாரம்.!✍️ ஆழ்கடல் உலகத்தை மனித இனம் வெறும் 1% மட்டுமே ஆராய்ச்சி செய்துள்ளது✍️ அடக்கடவுளே, ஆச்சர்யத்தில் மனித இனம்✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

அட கடவுளே இதுபோன்ற மிருகங்களா 40,000 வருடங்களுக்கு முன்பாக உயிர் வாழ்ந்தன? கிடைத்தது ஆதாரம்.!

பூமியில் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத பல மர்மங்கள் இன்னும் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து தான் இருக்கிறது, மனிதனால் இன்னும் பூமியில் உள்ள கடல்களில் ஒளிந்திருக்கும் மர்மங்களையே முழுமையாகக் கட்டவிளக்க முடியவில்லை. விஞ்ஞானிகளின் கணிப்புப் படி, ஆழ்கடல் உலகத்தை மனித இனம் வெறும் 1% மட்டுமே ஆராய்ச்சி செய்துள்ளது என்று நம்பப்படுகிறது. அதேபோல், பூமியில் இன்னும் பல நம்ப முடியாத மர்மங்களை தனக்குள் மறைத்து வைத்துள்ள இடமாக அண்டார்டிகா, சைபீரியா போன்ற அடர்ந்த பனிப் பிரதேசங்கள் பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்த பனிப் பிரதேசங்களில் வரலாற்றுக்கு முந்தைய பல உயிரினங்கள் பனியில் உறைந்த நிலையில் பதப்படுத்தப்பட்டு மனிதனின் கரங்களில் சிக்கியுள்ளன, இதுவரை ஏராளமான உயிரினங்களின் உறைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதில், நமது பூமி கிரகத்தின் வரலாற்றில் சுமார் 40,000 வருடங்களுக்கு முன்பாக உயிர் வாழ்ந்த உயிரினங்களின் உடல்களை மனிதர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி பனியில் உறைந்து நமக்குக் கிடைத்த வரலாற்றுக்கு முந்தைய 5 உயிரினங்களின் நம்ப முடியாத தகவலைத் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இப்போது பூமியில் வாழும் காண்டாமிருகத்தின் தோல் சுரசுரப்பாக முடிகள் எதுவும் இல்லாமல் முரட்டுத் தனமாக இருப்பதை மட்டும் தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் கம்பளி காண்டாமிருகங்கள் உயிர் வாழ்ந்துள்ளன என்பதை இந்த சாஷா காண்டாமிருக குட்டி நிரூபித்துள்ளது. சாஷா என்ற இந்த செல்லப்பெயர், இந்த காண்டாமிருக குட்டியைப் பனியின் ஆழத்தில் இருந்து கண்டுபிடித்தவரால் வைக்கப்பட்டுள்ளது.

120 ஆண்டு இளமையோடு சாகாமல் உயிர் வாழ ஆசையா? ‘சாகா வரத்திற்கான’ விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..

அதன் இனத்தின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் இளம் உறுப்பினர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆணா அல்லது பெண்ணா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இதன் கொம்பு அளவு அது இறக்கும் நேரத்திலேயே பாலூட்டப்பட்டதாகக் கூறுகிறது. இது ஸ்பெயினிலிருந்து சைபீரியா வரை வறண்ட, குளிர்ந்த பகுதியான மாமத் புல்வெளியில் சுற்றித் திரிந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் கிழக்கு சைபீரியாவில் 2017 ஆம் ஆண்டில் ஸ்குவாஷ் செய்யப்பட்ட, மம்மிஃபைட் பூனையைக் கண்டுபிடித்தனர். இது ஒரு லின்க்ஸ் பூனைக்குட்டியாக அல்லது குகை சிங்கக் குட்டியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் கோட் அழகான நிலையில் உள்ளது, அதாவது அதன் சருமம் இன்னும் கெடாமல் இருக்கிறது. ஆனால் ஒரு குகை சிங்கம் எப்படி இருந்தது என்று நமக்கு இன்னும் உண்மையில் தெரியாது என்பதால், இதன் இனங்கள் குறித்த உறுதியான கண்டுபிடிப்பை நாம் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறோம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

300 அடிக்கு மேல் வளர்ந்து வரும் பூமியின் திடீர் பள்ளம்.. இது சாதாரணம் இல்லை என்று எச்சரிக்கை; ஏன் தெரியுமா?

சைபீரியாவின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்த இரண்டு மாமத் பெரிய கன்றுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். ஆராய்ச்சியாளர்கள் சி.டி ஸ்கேன்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உன்னிப்பாகக் கவனித்தனர், அதில் இரண்டு குழந்தை மாமத்களும் சேற்றில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து இருப்பதைக் கண்டுபிடித்தனர். சிறிய மாமத்கள் இறந்த போது நல்ல குண்டாகவும், ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக முழுமையான புல்வெளி பைசன் இது மட்டும் தான். இந்த பண்டைய காட்டெருமையின் மாதிரி சுமார் 9,000 ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது பணியில் இத்தனை ஆண்டுக் காலம் இருந்ததினால் பக்குவமாகப் பதப்பட்டுள்ளது. இதன் உடலில் இன்னும் முழுமையான இதயம், மூளை மற்றும் செரிமான அமைப்பு போன்ற உறுப்புகள் இன்னும் கெடாமல் இருக்கிறது. மேலும் சரியான இரத்த நாளங்களுடன் இது காணப்படுகிறது. சில உறுப்புகள் காலப்போக்கில் சுருங்கிவிட்டன,இருப்பினும் அடையாளம் காணும் படி உள்ளது.

அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!

இது ஒரு இரண்டு மாத குதிரை குட்டியாகும். இது சுமார் 30,000 முதல் 40,000 வருடங்களுக்கு முன்பாகவே இறந்துவிட்டது. இருப்பினும் சைபீரியாவின் ஒரு ஆழமான பள்ளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தோராயமாக மேற்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் (328 அடி) கீழே இந்த இளம் குதிரை குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 1 மீ (3 அடி) உயரத்தில் இருந்துள்ளது. அதன் கால்கள் இன்னும் அப்படியே உள்ளன, சிறிய முடிகளுடன், நுரையீரலின் நாசிக்குள் இன்னும் அப்படியே இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *