கூகில் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு அறிமுகமா? விலை இவ்வளவு தானா? அவ்வளவு டெக்னாலஜியா✍️புதிய தகவல் சொல்லும் விஷயமே வேற லெவல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

ஜியோபோன் 5ஜி தீபாவளிக்கு தான் அறிமுகமா? விலை இது தானா? புதிய தகவல் சொல்லும் விஷயமே வேற..*

ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கும் புதிய ஜியோபோன் 5ஜி சாதனம் ஜூன் 24 ஆம் தேதி நிறுவனத்தின் அமைக்கப்பட்ட வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) 2021 இல் அறிமுகம் செய்யப்படும் என்று முன்னர் வெளிவந்த அறிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது வெளியாகியுள்ள புதிய அறிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட கதையைப் பரிந்துரைக்கின்றது. புதிய ஜியோபோன் 5ஜி சாதனம் எப்போது அறிமுகமாகும் என்று பார்க்கலாம்.

இந்த ஆண்டு தீபாவளியைச் சுற்றி 5 ஜி ஜியோபோன் அறிமுகமாகும் என்று புதிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றது. எனவே, வரவிருக்கும் கூகிள்-ஜியோ 5 ஜி ஸ்மார்ட்போனில் நாம் கைகளில் பெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த வார தொடக்கத்தில், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5 ஜி ஸ்மார்ட்போனை விரைவில் இந்திய நுகர்வோருக்காக அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஜியோ-கூகிள் 5 ஜி ஸ்மார்ட்போன் அல்லது ஜியோபோன் 5 ஜி சாதனம் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதங்களில் அறிமுகமாகும் என்று புதிய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது இந்த ஆண்டு தீபாவளியைச் சுற்றி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வ தகவல் விவரங்களை ஜியோ அல்லது கூகிள் வெளியிடும் வரை காத்திருக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

இருக்கு., ஒரு விருந்தே இருக்கு- ஜியோ போன், ஜியோ லேப்டாப், ஜியோ 5ஜி சேவை: ஜூன் 24 ரிலையன்ஸ் ஏஜிஎம் நிகழ்வு!

ஜியோவின் 5 ஜி ஸ்மார்ட்போன் தற்போது “டிக்சன் டெக்னாலஜிஸ், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ், யுடிஎல் நியோலின்க்ஸ் மற்றும் விங்டெக் மொபைல்கள்” ஆகியவற்றின் உற்பத்தி வசதிகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வளர்ச்சிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றது. ஜியோபோன் 5 ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே R&D ஆராய்ச்சி கட்டத்தை கடந்துள்ளது என்பதையும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஜியோபோன் 5 ஜி விலையை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சமீபத்திய தகவல்களின்படி, வரவிருக்கும் கூகுள்-ஜியோ 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை $ 50க்கு கீழே இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது சுமார் ரூ. 3,650 என்ற விலையை நெருங்குகிறது. தோராயமாகப் பார்க்கும் போது இந்த தொலைபேசியின் விலை ரூ. 3500 ஆக இருக்கலாம். இந்த 5 ஜி ஜியோபோன் விரைவில் தொடங்கலாம் என்பதனால், இதற்கான முன்பதிவை நிறுவனம் விரைவில் துவங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

300 அடிக்கு மேல் வளர்ந்து வரும் பூமியின் திடீர் பள்ளம்.. இது சாதாரணம் இல்லை என்று எச்சரிக்கை; ஏன் தெரியுமா?

ஜியோவின் 5 ஜி சாதனத்திற்கான மென்பொருளை மேம்படுத்துவதற்காக இந்த திட்டத்தில் கூகிள் கைகோர்த்துள்ளது. அதே நேரத்தில் விங்டெக் நிறுவனம் வன்பொருளை வடிவமைக்கும் என்று வளர்ச்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பிற விற்பனையாளர்கள் ஸ்மார்ட்போனின் இணைப்பு அம்சங்களில் பணிபுரிவார்கள் என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. ஜியோபோன் 5ஜி சாதனத்தின் சோதனைகள் நடைபெற்று வருவதால், வெளியீட்டுத் தேதி இன்னும் உறுதியாகவில்லை.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *