இந்தியாதமிழகம்

ஆரம்பமே அமர்க்களம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த ,அதிமுக முன்னாள் அமைச்சர் K.T.இராஜேந்திரபாலாஜி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ஆரம்பமே அமர்க்களம்: ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்!*

advertisement by google

ஹைலைட்ஸ்:

advertisement by google

கொரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்

advertisement by google

ஸ்டாலினின் உழைப்பை குறை சொல்ல முடியாது

advertisement by google

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அது முதல் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மூத்த அரசு அதிகாரிகள் மட்டத்தில் மிஸ்டர் க்ளீன் என்று பெயர் எடுத்தவர்களை நியமனம் செய்துள்ளது. முக்கியத்துறைகளுக்கு புதியவர்களாக இருப்பினும் அவர்களை அமைச்சர்களாக தேர்வு செய்தது என பலதரப்பிலும் அவரது அணுகுமுறை பாராட்டுக்களை பெற்றுள்ளது.

advertisement by google

அத்துடன், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளும் வேகமெடுத்துள்ளன. ஆக்சிஜன் உற்பத்தியில் கவனம் செலுத்துவது, தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்டுவது ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவும் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது.

advertisement by google

மேலும், விமர்சனங்களுக்கு உடனடியாக செவி சாய்ப்பதோடு அதற்கான தீர்வு காணும் அவரது முயற்சிகளும் நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்று கொரோனா நெகட்டிவிற்காக போராடும் வேளையில், அவர் மீதான பாசிட்டிவ் இமேஜை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

இந்த நிலையில், முதல்வராக ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போது கொரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடைய ஆரம்பம் அருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.

தொடரும் ஊரடங்கு… கட்டுப்பாடுகள் தீவிரம்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

மேலும், கடந்த ஆண்டுகளில் திமுகவினரின் உழைப்பு, திட்டமிடல் அனைத்தும் முக்கியமானது. தீவிர பிரசாரம், கடுமையான களப்பணியாற்றி வெற்றி பெற்றுள்ளார்கள். ஸ்டாலினின் உழைப்பை குறை சொல்ல முடியாது என்றும் ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூடியுள்ளார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button