கல்விவிவசாயம்

மாற்று விவசாயத்தில் அசத்தும் “இளம் அக்கா தம்பி”✍️நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த திரு . மாதேஸ்வரன் & திருமதி.வடிவுக்கரசி அவர்களின் மகன் செல்வன் மஞ்சுநாத் , மகள் செல்வி ஷன்மதி அவர்களின் புதிய முயற்சி என்ன✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மாற்று விவசாயத்தில் அசத்தும் “இளம் அக்கா தம்பி”

advertisement by google

விவசாயம் :

advertisement by google

ஆதிகாலம் முதல் இன்று வரை உணவு மற்றும் உணவு சார்ந்த விவசாயம் என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று என்பது உண்மை.

advertisement by google

ஆதிகால விவசாயத்திற்கும், 20-ம் நூற்றாண்டின் விவசாயத்திற்கும் பலநூறு வித்தியாசங்கள்.
வித்தியாசங்கள் என்பதை விட அறிவியல் முன்னேற்றம் என கூறலாம்.

advertisement by google

அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி காலத்திற்கு தகுந்தார் போல் சற்றே வித்தியாசமாக விவசாய செய்து வரும் இளம் அக்கா தம்பியின் ஓர் புதுமையான முயற்சி பற்றி பார்ப்போம்.

advertisement by google

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த திரு . மாதேஸ்வரன் & திருமதி.வடிவுக்கரசி அவர்களின் மகன் செல்வன் மஞ்சுநாத் , மகள் செல்வி ஷன்மதி அவர்களின் புதிய முயற்சி என்ன என்பதை காணலாம்.

advertisement by google

சிறு வயது முதலே விவசாய மீது கொண்ட ஆர்வம் தற்போது மாற்று வழி விவசாயத்திற்கு முன்னெடுத்து செல்ல வழிவகை செய்து உள்ளது.

advertisement by google

விவசாயம் சார்ந்து ஏதேனும் புதுமை அல்லது மாற்றம் செய்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இவர்களின் ஆர்வம் மற்றும் முயற்சி பாராட்டத்தக்கது.

PVC PIPE மற்றும் விவசாயத்தை இணைத்து ஏதேனும் செய்ய வேண்டும் என‌ எண்ணிய இவர்களின் கூட்டு முயற்சி இதுவாகும்.

PlastAGRI

PVC PIPE னை பயன்படுத்தி காற்று சுத்தப்படுத்தும் சிறிய வகை செடிகள் மற்றும் சிறிய உணவு சார்ந்த செடிகளை வளர்த்து வருகிறார்கள்.

குறைவான இடம் மற்றும் குறைவான தண்ணீர் இருந்தால் இது சாத்தியம் என்கிறார்கள்.

இதற்கு அதிக பணமோ , நேரமோ தேவையில்லை.

மாடித்தோட்டம் போல் சற்றே மாறுபட்ட முயற்சி இது.
நமக்கு தேவையான அழகுசெடி மற்றும் குறிப்பிட்ட உணவு செடிகளை நாமே நமது வீட்டில் அறுவடை செய்து கொள்ளலாம்.

4×3 (4Layer ) என்ற குறைந்த பரப்பளவில் 5 வகையான கீரை & செடிகளை வைத்து வளர்த்து , அறுவடை செய்து அசத்துகிறார்கள்.

மேலும்., இதுதவிர
” PVC DEEP DRIP SYSTEM ” என்ற புதிய சற்றே மாறுபட்ட முறையை அறிமுகம் செய்கிறார்கள்.

நமது தோட்டத்தில் பயன்படுத்தப்படும் சொட்டுநீர் பாசனம் முறையை விட , இந்த PVC DEEP DRIP SYSTEM பயன்படுத்தும் போது மிகக்குறைந்த அளவில் நீர் இருந்தால் போதுமானது.

இந்த முறையை பயன்படுத்துவதால் நீரானது வேர் வரை சென்று அதிக வளர்ச்சி தருகிறது.

நீர் சிக்கனம் & நேரம் குறைவு & குறைவான பணம் இருந்தால் போதுமானது.

கோடைக்காலத்தில் இந்த முறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இதுதவிர திருமண மண்டபம் , நர்சரி கார்டன் , ஹோட்டல் ,வீடு போன்ற இடங்களை அழகு படுத்தி தருகிறார்கள்.

இன்றைய நவீன உலகில் பெறுகி வரும் மக்கள் தொகைக்கு இந்த முயற்சி மிகுந்த பலன் கிடைக்கும்.

இந்த முறையில் மக்கள் தங்களது வீட்டில் & தோட்டத்தில் செய்ய விருப்பட்டால் குறைந்த விலையில் செய்து தருவதாக கூறுகிறார்கள் இளம் விவசாய அக்கா தம்பி.

இவர்களின் முயற்சிக்கும் நாமும் உறுதுணையாக இருப்போம்.

நன்றி

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button