இந்தியாதமிழகம்

எப்ரல் 10ந்தேதி முதல் தமிழகத்தில் மினி லாக்டவுண் – தமிழக அரசு அறிவிப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

எப்ரல் 10ந்தேதி முதல் தமிழகத்தில் மினி லாக்டவுண் – தமிழக அரசு அறிவிப்பு

advertisement by google

✍மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதற்கான தடை தொடரும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைப்படி எந்தவித தலைவர்களும் முழுமையாக கடைபிடிக்கப்படும் நோய் கருத்தில்கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு பத்துநாள் 2021 முதல் தடை விதிக்கப்படுகிறது.

advertisement by google

ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

advertisement by google

✍தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும் கை சுத்திகரிப்பான் உபயோகத்தையும் முகமணி வரையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். முகக்கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும் நிலையான வழிகாட்டு முறைகளை முறையாக முன்பாக தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

advertisement by google

✍நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும். மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மற்றும் பயணிகளின் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. தற்போது நோய் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கண்டிப்பாக பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றியே காய்கறி, கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் அனைத்தும் ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) 50 விழுக்காடு வாடிக்கையாளருடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.

advertisement by google

✍ உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதி.
மேலும் உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதி.
கேளிக்கை விடுதிகளில் 50 விழுக்காடு வாடிக்கையாளருடன் செயல்பட அமைக்கப்படும். பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படுத்த அனுமதி.

advertisement by google

✍உள்அரங்கங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்கு அனுமதிக்கப்படும்.
திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும் இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதி.
நீச்சல் குளங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதி. பொருள்காட்சி அரங்கங்கள் வர்தகங்களுக்கு இடையிலான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணிவரை அனுமதி. அனைத்து வழிபாட்டு தலங்கள் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. சின்னத்திரை மற்றும் திரைப்படத்துறைக்குபடபிடிப்புகள் தொடங்கப்படும். இருப்பினும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் சின்னத்திரை திரைப்பட கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1/07/ 2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கலாம்.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ -பாஸ் முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button