தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

✍தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு முதன்மை
செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் குமார்ஜெயந்த், தலைமையில் கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்
தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (09.04.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் ஷரண்யாஅறி, சார்
ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர்
கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

✍இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும்
கணக்குத்துறைகள் குமார்ஜெயந்த் பேசியதாவது:
கொரோனா நோய் தொற்றினை முற்றிலும் தடுத்திடும் விதமாக, தமிழ்நாடு அரசு
தளர்வுடன் கூடிய ஊரடங்கு உத்தரவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும் சமூக
இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும். நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்து
வருகிறது. நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும்
நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோவிட் நோய்
தொற்றினைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த
அனுமதி இல்லை.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர, இதர
பகுதிகளில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன்
அனுமதி அளிக்கப்படுகிறது.

✍தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார்
நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள்,
அலுவலர்கள், மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை (வுhநசஅயட ளுஉயnniபெ), பரிசோதனை
செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் (ர்யனெ ளுயnவைணைநச) உபயோகப்படுத்துவதையும், முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிக அளவில்
தடுப்பூசிகளை போட வேண்டும். மேலும் கொரோனா குறித்த டெஸ்ட் செய்வதை
அதிகப்படுத்த வேண்டும். டெஸ்ட் அதிகப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவும் வேகத்தை
கட்டுப்படுத்த வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள், வருவாய் துறை
அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் என அனைத்துறை அரசு அதிகாரிகளும்
குழுக்கள் அமைத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிவதையும்,
சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும்
அரசு அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். போட்டுக்கொள்வது
மட்டுமல்லாமல் கொரோனா விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல்
முகாம்களையும், கொரோனா பரிசோதனை முகாம்களையும் நகரம் மற்றும் ஊரகப் பகுதியில்
அதிக அளவில் நடத்த வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி
போடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும்
திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். கொரோனா
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலேயே கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த
வேண்டும். கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக அதிகளவில்
பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை
கடைபிடிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று இல்லாத
மாவட்டமாக உருவாக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும்
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

✍கூட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்
மரு.ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா,
பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.முருகவேல், சுகாதாரப்பணிகள் துணை
இயக்குநர்கள் மரு.போஸ்கோராஜ் (தூத்துக்குடி), மரு.அனிதா (கோவில்பட்டி), மாவட்ட
உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், மாநகராட்சி நகர் நல அலுவலர்
மரு.வித்யா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *