வாக்குச்சாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரம் அனுப்பும்பணி தீவிரம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

வாக்குச்சாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரம் அனுப்பும்பணி தீவிரம்

✍தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சாவடிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

✍தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரம் வாக்குச் சாவடிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், சார் ஆட்சியர் சிம்ரன் சித் சிங் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 405 வாக்குச்சாவடி மையங்களுக்கு
வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட் , கண்ட்ரோல் யூனிட், வி.வி.பாட்,
உள்ளிட்ட இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. வாகனத்தில் உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரம், வாக்குச்சாவடிகளுக்கு ஏற்றி செல்லும் பணி நடைபெற்று வருகிறது‌. நாளை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் சுமார் 2000 பேர் ஈடுபட்டுள்ளதாக சார் ஆட்சியர் சிம்ரன் சித் சிங் தெரிவித்தார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *