பீர்பாட்டிலால் தாக்கி ஒருவர் மர்மக்கொலை – கொலையாளிகளுக்கு தூத்துக்குடிபோலீசார் வலைவீச்சு✍️

பீர்பாட்டிலால் தாக்கி ஒருவர் மர்மக்கொலை – கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

✍தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் மொட்டைகோபுரம் கடற்கரை கரைவலை பகுதி, விவேகானந்தர்நகர் அருகில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சிலுவைராஜா (42) என்பவர் இன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *