இந்தியாதமிழகம்பயனுள்ள தகவல்

தேநீர், காபி கடை வைத்தி விற்பனை நிலையங்களில்பாய்லர் கட்டாயமாக்கப்படவேண்டும்✍️தேநீர் அல்லது காபியை கண்ணாடி தம்ளரில் ஊற்றிக் கொடுக்கும் முன் ஆவி பறக்கும் வெந்நீரால் அதைக் கழுவி,விற்பணை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி விண்மீன்தேசியகழகம்,தமிழ்தமிழர்கழகம் கோரிக்கை✍️தமிழ்நாடு உணவுபாதுகாப்பு துறை துரித நடவடிக்கை எடுக்குமா✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கொரானா தொற்றை தடுப்பதில்
சமூகக் கடமை ஆற்றும்படி

advertisement by google

தேநீர், காபி விற்பனை செய்யும் சகோதரர்ளை
வேண்டுகிறோம்.

advertisement by google

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அமலாக்கப்பட்டது.

advertisement by google

சுழற்றி அடிக்கும் ஊழிக்காற்று போல நம் சமூகத்தை ஒரு வழி ஆக்கிவிட்டு தணிந்தது.

advertisement by google

இப்போது மீண்டும் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

என் அனுபவத்தில், விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பல இந்நோய்க்கு பலியாயின. சிலருக்கு நோய் குணமான பின்பும் மாதக்கணக்கில் அவர்கள் சிகிச்சையில் இருக்க நேரிட்டது.

இப்போது தடுப்பூசி வந்துவிட்டது .பரவலாக பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதை பார்க்கிறேன். தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நான் தொடர்ந்து பயணிப்பவன் என்பதால் சமூக நலனுக்காக சில ஆலோசனைகளை சொல்வது என் கடமை என்று கருதுகிறேன்.

அண்மைக்காலமாக பேருந்து, ரயில் மற்றும் நிகழ்ச்சிகளில் முகக் கவசம் அணிவது வெகுவாக குறைந்துள்ளது. இது சரியல்ல.

அரசாங்கம் சொல்லுவதை கவனமுடன் கேட்டு , முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தல் அவசியம்.

குறிப்பாக தேநீர், காபி கடை வைத்திருக்கும் சகோதரர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்பவர்களுக்கு அன்பு வேண்டுகோள்:

முன்பெல்லாம் பாய்லரில் வெந்நீர் சுடச்சுட இருக்கும். தேநீர் அல்லது காபியை கண்ணாடி தம்ளரில் ஊற்றிக் கொடுக்கும் முன் ஆவி பறக்கும் வெந்நீரால் அதைக் கழுவுவார்கள்.

பிளாஸ்டிக் டம்ளர்( Use and throw glass) வந்த பிறகு அந்த பாதுகாப்பான கண்ணாடித் தம்ளர் பழக்கம் குறைந்து போனது.

சூடான காபி, தேநீருக்கு பிளாஸ்டிக் தம்ளரைப் பயன்படுத்துவது கேடு என்பதை உணர்ந்த பிறகு மீண்டும் தற்போது கண்ணாடி தம்ளர் பழக்கத்திற்கு வந்துவிட்டது .

ஆனால் ,முன்பு இருந்தது போல சூடான தண்ணீரில் இப்போது கழுவுவது இல்லை. பெரும்பாலும் சாதாரண தண்ணீரில் மட்டும் கண்ணாடி தம்ளரை கழுவி எடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.

கொரோனா கிருமி சாதாரண ஜலதோசக் கிருமி மாதிரி பரவும் தன்மை கொண்டது. சுடு தண்ணீரால் கழுவி எடுக்கப்படாத கண்ணாடி தம்ளர்கள் வாயிலாக இக்கிருமி பரவிட அதிகம் வாய்ப்புள்ளது .

எனவே ,காபி -தேநீர் விற்கும் சகோதரர்கள் இதை கருத்தில் கொண்டு சமூகக் கடமையாற்றும் படி வேண்டுகிறேன்.
இது போன்ற விஷயங்களை உற்றுநோக்கி உரிய அறிவுறுத்தல்கள் வழங்கும்படி தமிழக அரசாங்கத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.

“இளைதுஆக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து (குறள் 879).

பொருள்:
ஆபத்தை முளையிலேயே எளிதாக நீக்கிவிட முடியும். அதைச் செய்யத் தவறும்போது அதற்காக பெரும் துன்பத்தை சந்திக்க நேரிடும் .

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button