கோவில்பட்டியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்தவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது.
✍கோவில்பட்டி, பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் கணேஷ்குமார்(36). இவர் 10.03.2021 அன்று 9 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி குழந்தைகள் நல அலுவலர் சுபாஷிணி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகக்குமாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தார்.