மூங்கில் மரம் ஆச்சர்யமூட்டும் அதிர்ச்சியான தகவல்கள்✍️மற்ற மரங்களை விட மூங்கிலின் வளர்ச்சி அதிவேகமானது. அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 39 முதல் 47 இன்ச் வரை வளரக்கூடியது✍️மூங்கில்கள் 35சதவீதம் அதிக ஆக்சிஜனை வெளியிடக்கூடியவை. மட்டுமல்லாமல் 4 பங்கு அதிக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி சுத்தம் செய்யக்கூடியவை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

மூங்கில் காடுகள்..!!

மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில்கள் 35சதவீதம் அதிக ஆக்சிஜனை வெளியிடக்கூடியவை. மட்டுமல்லாமல் 4 பங்கு அதிக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி சுத்தம் செய்யக்கூடியவை.

மற்ற மரங்களை விட மூங்கிலின் வளர்ச்சி அதிவேகமானது. அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 39 முதல் 47 இன்ச் வரை வளரக்கூடியது.

மூங்கிலின் மருத்துவ குணங்களை உணர்ந்ததாலேயே நம் முன்னோர்கள் வீடு கட்டுவதற்கு அதிக மூங்கில்களை உபயோகித்தனர்.

இயற்கையிலேயே பாக்டீரியாக்களையும், பூஞ்சைகளையும் எதிர்க்கும் சக்தியிருப்பதால், மூங்கில்களுக்கு தனியாக பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவைப்படுவதில்லை.

இரும்பை விட மூங்கிலின் Tensile strength(“இழுவிசை வலு” என்று தமிழகராதி அர்த்தம் சொல்கிறது) அதிகம். மூங்கிலில் கிட்டத்தட்ட 1450 வகைகள் உள்ளன.

சீனாவிலிருக்கும் Min-chiang என்ற ஆற்றின் மீது உலகின் நீளமான மூங்கில் பாலம் இருந்தது. 1000 ஆண்டுகள் பழுதடையாமல் இருந்த 850அடி நீளமும் 9 அடி அகலமும் உள்ள இந்தப்பாலம் 1974ஆம் ஆண்டு இரும்புப்பாலமாக மாற்றப்பட்டது.

1945ஆம் ஆண்டு ஹிரோஷிமாவில் நடந்த அணுகுண்டு தாக்குதலின் கதிரியக்க விளைவால் அங்கிருந்த அனைது மரம் செடிகளும் கருகிப்போக, மீதமிருந்தது ஒரே ஒரு மூங்கில் தோப்புதான்.

சில வருடங்களுக்குப் பின் இறந்து போன அம்மூங்கிலின் சில பகுதிகள் ஹிரோஷிமாவிலிருக்கும் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

யானை, கொரில்லா, பாண்டா கரடி போன்ற விலங்குகளின் விருப்ப உணவாக இருக்கும் மூங்கில்கள் மரங்களல்ல; “புற்கள்” குடும்பத்தைச் சேர்ந்தவை.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *