15 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்துகொண்ட நபர் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

15 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்துகொண்ட நபர் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை கரிசல் குடியிருப்பைச் சேர்ந்த சிங்கத்துரை (31) என்ற நபருக்கு அவரின் பெற்றோர்,15 வயது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து கடந்த 15.02.2021 அன்று திருமணம் செய்து வைத்துள்ளனர்..பின்னர் சிங்கத்துரையும் அந்த 15 வயது சிறுமியும் சேர்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இதனை அறிந்த வாசுதேவநல்லூர் சமூகநல விரிவாக்க அலுவலர் திருமதி. குருபாக்கியம் அவர்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.பிரேமா அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சிங்கத்துரை அவரின் தந்தை முருகன்,தாய் புதியவள்,சிறுமியின் தந்தை வெங்கையன்,தாய் முத்துலட்சுமி,மற்றும் குழந்தை திருமணத்திற்கு உதவியாக இருந்த உறவினர்கள் நாகமணி,சின்னத்துரை, மாரியம்மாள் ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிங்கத்துரை மற்றும் முத்துலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தார்.மேலும் மற்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *