t

திருச்சியில் அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும், அன்பான தம்பதியினர்,பொதுமக்கள் நெகிழ்ச்சி✍️ கோஅபிஷேகபுரம்கோட்டம் புத்தூர் பகுதியில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மூலம்✍️ அனாதைப் பிணங்களை யோகாசீரியல் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா, தம்பதியினர் சகிதமாக ஈமச்சடங்கு செய்தும் நல்லடக்கம் செய்து வருகிறார்கள்✍️ யோகா ஆசிரியர் விஜயகுமார் எழுத்தாளர், பழம்பொருள் சேகரிப்பாளர், சமூக சேவகர் என பன்முகம் கொண்டவர். வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் திருச்சி நீதிமன்றத்தில்,வழக்கறிஞர் பணியினை செய்து வருகிறார்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்யும் தம்பதியினர்

advertisement by google

திருச்சிராப்பள்ளி கோஅபிஷேகபுரம் கோட்டம் புத்தூர் பகுதியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மூலம் அனாதைப் பிணங்களை யோகா சீரியல் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர் சகிதமாக ஈமச்சடங்கு செய்த நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.
யோகா ஆசிரியர் விஜயகுமார் எழுத்தாளர், பழம்பொருள் சேகரிப்பாளர், சமூக சேவகர் என பன்முகம் கொண்டவர். வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்
திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியினை செய்து வருகிறார்.

advertisement by google

சமூக ஆர்வலரும் யோகா ஆசிரியருமான விஜய குமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் திருமணம் புரிந்து பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடு பட்டு வருகிறார்கள். தவப்புதல்வியாக கீர்த்தனா உள்ளார். அன்னதானம் முதல் அமரர் அடக்கம் வரை தொடர்ந்து செய்து வருகிறார்கள்

advertisement by google

அன்னதானம்

advertisement by google

அன்னத்தை வழங்குபவா் சுகமாக வாழ்வார் என்ற மூதுரையும்,
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி
(226 திருக்குறள்)
உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜென்மங்களையும் தொடர்ந்து வரும்.

advertisement by google

அன்னதானம் மட்டுமே, செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.

advertisement by google

அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும்.

advertisement by google

அப்படிப்பட்ட அன்னதானத்தை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மூலமாக காலை, மாலை என அன்னதானத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். ஆதரவற்ற சாலையோரங்களில் சகமனிதனை மனிதனிடம் கையேந்தி ஜீவனம் நடத்தி வெயில் மழை கடும் குளிர் என சாலைகளில் வாழ்ந்து வருபவர்களை கண்டறிந்து தினசரி உணவு வழங்கி வருகிறார்கள்.

வருடம் முழுவதும் மனிதர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது

தற்போது பலர் திருமணம், பிறந்தநாள் போன்ற தினங்களில் உணவு வழங்க முன்வருகிறார்கள்.

விசேஷ தினங்களில் அதிகமான உணவுகளை ஏழைகளுக்கு வழங்கும் வகையில் தனவான்கள் முன் வருகிறார்கள்.

அமாவாசை பவுர்ணமி தினத்தில் நன்பகல் 12:00 மணிக்கு மதிய உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உணவை வீணாக்காதீர்கள்

உலகளவில் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு ஆண்டுதோறும் வீணாக்கப்படுகிறது.
வீணாக்கப்படும் உணவைக் கொண்டு பசியில் வாடிக் கொண்டிருப்போர்க்கு சுமார் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளதுடன்,
திருமணம் மற்றும் சமூக நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.
பொதுவாக
திருமண நிகழ்வுகளில் உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை குப்பைத்தொட்டியில் அல்லது ஆறு உள்ளிட்ட நீரோடைகளில் கொட்டி விடுகிறார்கள். பெரும் பொருட்செலவில் தயாரித்த உணவுகளை சில நிமிடங்களில் யாருக்கும் பயன் இல்லாத வகையில் கொட்டப்படுவது மிகவும் வேதனைக்குரியது. இதனை கருத்தில் கொண்டு திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர் தன்னார்வலர்களுடன் இணைந்து மீதமாகும் உணவுகளை சேகரித்து அவசியமானவர்களுக்கு வழங்குவதை பெரும் சேவையாக கருதி செயல்பட்டு வருகின்றனர்.
உணவுப் பற்றாக்குறையுடன் பலர் இன்றும் நம்மிடையே வாழ்கின்றனர்.
உண்ணும் உணவினை வீண்விரையம் செய்வது மிகப்பெரிய தவறாகும். எனவே உண்ணும் உணவுகளை வீணாக்காதீர்கள் என்ற பரப்புரையும் செய்துவருகின்றனர்.

ஜீவகாருண்யம்

மனிதர்களிடத்து மட்டுமன்றி வள்ளலார் தாவரங்கள், புழு, பூச்சிகள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினார். இதனையே “ஜீவகாருண்யம்” என்றார்

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனக் கூறிய வள்ளலார், உயிர்களிடத்து எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதை அரியலாம். அதனடிப்படையில்
பறவைகள், கால்நடைகள், தெருவோரப் பிராணிகள் பலன் பெறும் வகையில் வருடந்தோறும் 24 மணி நேரமும் உணவுகளும்
குடிநீரும்
வழங்கப்படுகிறது.

வீடுகள் தோறும் நூலகம் அமைக்க பரப்புரை

ஒரு நூலகம் திறக்கப்பட்டால் நூறு சிறைச்சாலைகள் மூடப்படும் என்பார்கள் ஏனெனில் வாசிப்பு ஒரு மனிதனை பன்பட்டவனாக பக்குவப் பட்டவனாக செதுக்கும்.

நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.

நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு”
என்று ஒளவையார் கூறியுள்ளார்.

நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே.
அந்த வகையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் திருச்சிராப்பள்ளி புத்தூர் பகுதியில் நூலகம் அமைத்து பொதுமக்கள் படிக்க வழி வகை செய்துள்ளனர்
விஜயகுமார் சித்ரா தம்பதியினர்.
வீட்டுக்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் பொதுமக்களிடையே பரப்புரை செய்து வருகின்றனர்

கற்றல் என்பதற்கு சில சிறப்பியல்புகள் காணப்படுகின்றன. இது காலத்துடன் மாற்றமடைந்து செல்லும் . கற்றலானது நாம் ஏற்கனவே பெற்ற அறிவில் தங்கிக் காணப்படுகின்றது. இது நாம் பெற்ற அறிவின் திரட்டு என்பதிலும் பார்க்க ஒரு படிமுறை சார்ந்த வளர்ச்சி ஆகும்.
மனிதனின் கற்றலானது கல்வி, சுயமுன்னேற்றம், பாடசாலை, பயிற்சிகள் என்பவற்றினால் உருவாக்கப்படுகின்றது. இது ஒரு இலக்கை நோக்கியதாகவும் ஊக்கப்படுத்தலினால் அதிகரிக்கப்படுவதாகவும் காணப்படுகின்றது. எனவே ஒவ்வொருவரும் வீட்டில் நூலகம் அமைத்து அவர்களுக்கு தேவையான துறையை தேர்வு செய்து தானும் கற்று சமூகத்திற்கும் கற்பிக்க வேண்டும் என்பதை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மூலமாக வலியுறுத்தி வருகின்றனர்

வீதிகளில் ஆதரவின்றி
சுற்றித்திரியும் பிராணிகளுக்கு உணவு

வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாய்கள், கால்நடைகள், உடல்நலம் பாதித்த விலங்குகளுக்கு, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் ஆகியவற்றுக்கு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பிராணிகளுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி வருகின்றார்.
ஆதரவற்ற செல்லப் பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கும் பல ஆண்டுகளாக உணவு வழங்கியும்,
வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாயினங்கள், மற்றும் கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் ஆகியனவற்றை
பராமரிக்க விலங்கின ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் முயற்சி எடுத்து வருகிறார்கள்.
திருச்சி புத்தூர் பகுதியில் உணவு மற்றும் பிராணிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில்
உணவின்றி சிரமப்படும் நாயினங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு உணவு அளிக்கவும், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் ஆதரவற்ற கால்நடைகள் மற்றும் பிராணிகள் நலன் பேண முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கென பிரத்யேகமாக உணவு மற்றும் குடிநீருக்கான தொட்டிகள் வைத்து உணவளித்து வருகிறார்கள். மேலும் விலங்கின ஆர்வலராக இருந்து தெருவோர நாட்டு இன நாய் குட்டி வளர்க்க விருப்பமுள்ளவருக்கு நாட்டு இன நாய்க் குட்டிகளும் வழங்கி வருகிறார்.

அனாதை பிணங்கள்
நல்லடக்கம்

அனாதையாக இறந்து மருத்துவமனை பிணவறைகளில் உரிமை கோரப்படாத பெயர், விலாசம் தெரியாத பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் பணியினை செய்து வருகின்றனர்
உரிமை கோரப்படாத உடலினை காவல்துறை தரும் தகவலின் அடிப்படையில் மருத்துவமனை பிணவறையில் பெற்று முறைப்படி மயானத்தில் நல்லடக்கம் செய்கின்றனர். நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் நல்லடக்கத்தில் பங்கேற்றவர்கள் நல்லடக்க நிகழ்வின் புகைப்படம் அல்லது ஒலி ஒளி பதிவினை முறைப்படி பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் அறிவித்து வருகின்றனர்.ஒவ்வொரு அனாதை பிணங்கள் நல்லடக்கமும் நெஞ்சை உருக்கும் சம்பவமாகவே இருக்கின்றது என்கின்றனர்.நல்லடக்கம் செய்தது மனதை வருத்துவதாகவே அமையும். தெரிவித்து மயானத்திற்கு வருபவர்களும் உண்டு. இடைப்பட்ட காலங்களில் சாலையோரம் இன்னல்கள் அனுபவித்தது அவர்களுக்கு ஏராளமான அனுபவத்தை கொடுத்திருக்கும். தம்பதியினர் உள்ளனர் என்று செயல்பட்டு வருகின்றனர்.

உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்,
இரத்த கொடையாளர்க்கான கையேடும், மண்ணுக்குள் புதைப்பதை மனிதனுள் விதைப்போம் கண் தானம் விழிப்புணர்வு கையேடும்,
உடல் உறுப்பு தானம் உட்பட உடல் ஆரோக்கியம் குறித்து பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளனர்.

தனது வாழ்நாளிற்குப் பிறகு பார்வை இழந்து வாழும் எண்ணற்ற உடன்பிறவா சகோதர சகோதரிகளுக்கு யாருக்கேனும் ஒருவருக்கு பார்வை கொடுக்க விரும்பி தனது வாழ்நாளிற்குப் பின் இரு கண்களையும் பார்வையற்றோருக்கு கொடுத்திட மனப்பூர்வமாக இசைந்து கண் தான உறுதிமொழிப் படிவத்தில் கணவன் மனைவி இருவரும் கையெழுத்திட்டு உறுதி ஏற்றுள்ளனர்.

அனாதைப் பிணங்கள் நல்லடக்கம் செய்ய யோகா ஆசிரியர் விஜயகுமார் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை செல் 9842412247

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button