உதகை அருகே கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற ஆசாமிக்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

உதகை அருகே கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற ஆசாமிக்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

உதகை அருகே உள்ள பைக்காரா பகுதியைச் சேர்ந்த ஆனந்த்என்ற ஆனந்த்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்மணிக்கும் தகாத உறவு இருந்து வந்தது.
ஆயிஷாவுக்கு கணவன் இல்லாததால் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் ஆயிஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாகக்கூறி அடிக்கடி சந்தேகிப்பதுடன் குடிபோதையில் ஆயிஷாவுடன் ஆனந்த் குமார் சண்டையிட்டு வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த 24.06.2017 அன்று அவர்கள் இருவருக்குமிடையே தகராறு முற்றிய நிலையில் ஆயிஷா மீது ஆனந்த் குமார் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்தஆயிஷா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஆயிஷா தனது மரண வாக்குமூலத்தி்ல் ஆனந்த் குமார் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகக் கூறினார்.
ஆயிஷாவின் மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆனந்த் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பு வழங்கினார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *