இந்தியாதமிழகம்

திமுக வேட்பாளர் பட்டியல்✍️ வெளியிடும் தேதியை அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

திமுக வேட்பாளர் பட்டியல். தேதியை அறிவித்த ஸ்டாலின்

advertisement by google

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிலிருந்தே காணொலி காட்சி மூலமாக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்

advertisement by google

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “வரும் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில், தமிழகத்தின் 10 ஆண்டுகளுக்கான எனது தொலைநோக்கு பார்வையை அறிவிக்க உள்ளேன். இன்னும் இரண்டு மாதத்தில் ஆட்சிமாற்றம் நடைபெறும்,” என்று கூறியிருந்த நிலையில், வரும் மார்ச் 7 அன்று நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

advertisement by google

ஒருபுறம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், வரும் மார்ச் 10 ஆம் தேதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட இருப்பதாக மாவட்டச் செயலாளர்கள் உடனான கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button