சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் போலீஸார் கொடி அணிவகுப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

✍நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திலிருந்து மாதா கோவில் வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் அஸ்சாமில் இருந்து வருகை தந்த மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தேர்தல் நெருங்கும் வேலையில் மேலும் இரானுவத்தினர் வருகை தரவுள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறினார். டவுண் டிஎஸ்பி கணேஷ், ஆயுதப்படை டிஎஸ்பி கண்ணபிரான், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ், உதவி ஆய்வாளர்கள் ராஜமணி மற்றும் ரவிக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *