ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது: வருகிறது புதிய விதிமுறை✍️ ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியீடு✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது: வருகிறது புதிய விதிமுறை

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ஓட்டுநர் பரிசோதனையில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கொண்டு வர மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசிக்கிறது.
மேலும், இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது, ஓட்டுநர் பரிசோதனையில் (Driving test) கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்த நடவடிக்கை, போக்குவரத்துத் துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற டிரைவர்கள் கிடைக்க உதவும். இது அவர்களின் திறனை அதிகரிப்பதோடு, சாலை விபத்துக்களையும் குறைக்கும்.
பொது மக்களிடம் இருந்து ஆலோசனை பெறுவதற்காக, இந்த வரைவு அறிவிப்பு சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலோசனைகள் பெற்ற பின்பு இது முறைப்படி வெளியிடப்படும்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *