உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை!’ – “வாட்ஸ்அப்பே” “வாட்ஸ்அப்பில்” “ஸ்டேட்டஸ்” வைத்த காமெடி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை!’ – “வாட்ஸ்அப்பே” “வாட்ஸ்அப்பில்” “ஸ்டேட்டஸ்” வைத்த காமெடி…..!😎

வாட்ஸ்அப் அதன் பிரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாகச் சமீபத்தில் அறிவித்தது. இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது எனப் பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் ஒன்றைக் கடந்த வாரம் அனுப்பியது வாட்ஸ்அப். ‘Agree’ கொடுக்காமலிருந்தால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ்அப்பை உங்களால் பயன்படுத்த முடியாது என்றது வாட்ஸ்அப். உலகமெங்கும் வாட்ஸ்அப் பயனர்களிடையே இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பலரும் சிக்னல், டெலிகிராம் போன்ற மாற்றுச் சேவைகளுக்கு மாறத்தொடங்கினர்.

புதிய பிரைவசி கொள்கைகள் குறித்துக் கீழ்க்காணும் கட்டுரையில் படிக்கலாம்.

திடீரென இத்தனை புதிய பயனர்களை சமாளிக்க முடியாமல் சிக்னல் திணறியது. சில மணிநேரங்கள் முடங்கவும் செய்தது. வெறும் மூன்று நாட்களில் 2.5 கோடி பயனர்களை பெற்றுள்ளதாக அறிவித்தது டெலிகிராம். இந்த சூழலில் வாட்ஸ்அப்பை சுற்றியிருக்கும் குழப்பங்களைத் தீர்க்க தீவிர முயற்சிகளில் களமிறங்கியது வாட்ஸ்அப். செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்தது. சமூக வலைத்தளங்களில் விரிவான விளக்கங்கள் கொடுத்தது. புதிய பிரைவசி கொள்கைகள் குறித்து அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் அடங்கிய ஒரு FAQ பக்கத்தையும் நிறுவியது. இருந்தும் குழப்பங்கள் தீர்ந்த பாடில்லை. அதனால் புதிய பிரைவசி கொள்கைகளை மே மாதம் வரை தள்ளிப்போட்டது. இந்த இடைவெளியில் வாட்ஸ்அப்பின் பிரைவசி பற்றி எழுப்பப்படும் சந்தேகங்களைத் தீர்க்க முடியும். மக்களுக்குத் தெளிவான ஒரு புரிதலை உருவாக்க முடியும் என நம்புகிறது.

வாட்ஸ்அப்பின் விரிவான விளக்கத்தைக் கீழ்க்காணும் கட்டுரையில் படிக்கலாம்…

வரலாறு காணாத அளவில் மக்கள் பிற சேவைகளுக்குப் புலம் பெயர்ந்துவருகின்றனர். இதனாலேயே வாட்ஸ்அப் புதிய பிரைவசி கொள்கைகள் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தீவிரமாக இருக்கிறது. பெரும் டெக் ஆளுமைகள் பலரும் இதுதான் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறச் சரியான நேரம் என்று கருத்து தெரிவித்துவருகின்றனர். நெருக்கடியான இந்த சூழலிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வாட்ஸ்அப் திரும்புமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வாட்ஸ்அப் இப்படி அதன் சேவையிலேயே ஸ்டேட்டஸ் போட்டதைப் பலரும் கலாய்த்துவருகின்றனர்.⚡❇️

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *