பயனுள்ள தகவல்மருத்துவம்

உங்கள் பாதங்களை 2 பொருள் வைத்து எப்படி சுத்தமாகவும், மென்மையாகவும் மாற்றுவது✍️ இயற்கை மருத்துவம்,நீங்களே செஞ்சுக்கலாம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

? உங்கள் பாதங்களை 2 பொருள் வைத்து எப்படி சுத்தமாகவும், மென்மையாகவும் மாற்றுவது? இயற்கை பெடிக்யூர் நீங்களே செஞ்சுக்கலாம்

advertisement by google

எல்லோருக்கும் தங்களுடைய பாதங்களை பராமரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பாதம் தானே என்று அலட்சியமாக விட்டு விடுகிறோம். நம்முடைய மொத்த பாரத்தையும் தரையில் நிற்கும் பொழுது பாதம் தாங்கி நிற்கிறது. முழுநேர அலைச்சலில் பாதம் நமக்காக வேலை செய்து சோர்ந்து போய் விடுகிறது. அதை செய்ய ஆண்களும், பெண்களும் பாதங்களை தங்களுக்கு தாங்களாகவே இயற்கையான முறையில் பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.

advertisement by google

அதை எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

advertisement by google

பெடிக்யூர் செய்வதற்கு பார்லர் சென்று பல நூறு ரூபாய் நோட்டுகளை செலவு செய்வதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் இந்த இரண்டே பொருட்கள் வைத்து எப்படி சுலபமான முறையில் மென்மையான பாதங்களை பெறுவது? பாதங்களை பராமரிப்பது வெறும் அழகிற்காக மட்டுமல்ல, பாதங்களை சுத்தமாகவும், அழகாகவும் வைக்க நாம் சிறிது மெனக்கெட்டால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட முடியும். பாத பராமரிப்பு பெருமளவு யாரும் கவனிப்பதில்லை. இதற்கென 10 நிமிடம் செலவிட்டால் ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் தெரிந்து கொள்ளுங்கள்.

advertisement by google

பாதத்தில் ஏற்படும் சோர்வினால் சில டென்ஷன்கள் இயற்கையாகவே நமக்கு ஏற்பட்டு விடுகின்றன. எப்போதும் யாராவது அழுத்தி விட்டுக் கொண்டிருந்தால் சுகமாக இருக்குமே என்பது போன்ற உணர்வு இருக்கும். இது பொதுவாக எல்லோருக்குமே இருப்பது தான். குதிகால்களை இலேசாக அழுத்தி விட்டாலே அப்பாடா என்பது போல் வலிகள் நீங்கி சுகமாக இருக்கும். அத்தகைய பாதங்களை தினமும் இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது இவற்றை செய்து பராமரித்து வரலாம். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெது வெதுப்பாக தண்ணீரை சூடுபடுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிக சூடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் சிறிதளவு நீங்கள் தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூ சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அரை மூடி எலுமிச்சம் சாறை விட்டுக் கலந்து கொள்ளுங்கள்.

advertisement by google

இதனுள் உங்களுடைய பாதங்களை முழுமையாக நனையும்படி பத்து நிமிடம் வைத்திருந்தால் போதும். கால்களில் உள்ள அழுக்குகளும், தூசிகளும் மேலே மிதந்து வந்து விடும். அதற்குப் பிறகு உபயோகப்படுத்தாத பிரஷ் ஒன்றை எடுத்து பாதங்களை சுற்றி நன்கு தேய்த்து விடவும். பின்னர் மீண்டும் ஒரு முறை பாதங்களை சுத்தமாக கழுவி விட்டு மென்மையான டவலால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் பாதத்தில் உள்ள அசதி நீங்கும். தூய்மையான பாதங்களும் நமக்கு கிடைக்கும். அதன் பிறகு பாதங்களை வினிகர் அல்லது வாசலின் தடவி விட்டால் மிருதுவான பட்டு போன்ற பாதம் கிடைக்கும். இதனை தினமும் செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை செய்தாலே போதுமானது. கால்களில் இருக்கும் நகங்களை எப்பொழுதும் வெட்டி சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். சிலருடைய நக இடுக்குகளில் அழுக்குகள் படிந்து இருக்கும். அவற்றை நீக்க ‘ஹைட்ரஜன் பெராக்சைடு சொல்யூஷன்’ பயன்படுத்தலாம். இந்த லிக்விட்-ஐ நக இடுக்குகளில் சிறிதளவு விட்டு கொண்டால் நுரை நுரையாக வரும். அந்த நுரையுடன் சேர்ந்து அழுக்குகளும் முழுவதுமாக வெளியேறிவிடும். அதன் பின்னர் உங்களுடைய பாதங்கள் மிகவும் சுத்தமாகவும், மிருதுவாகவும் மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button