பயனுள்ள தகவல்வரலாறு

தட்டான்பூச்சி 325 மில்லியன் ஆண்டுக்கு முன்பு உள்ள பூச்சியினமா? இப்போதைய நிலைமை கவலைக்கிடம்?தட்டானின் முழுவரலாறு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பெயர்: தட்டான்…

advertisement by google

வயது: 325 மில்லியன் ஆண்டுகள்…

advertisement by google

இப்போதைய நிலைமை கவலைக்கிடம்!

advertisement by google

“கல்லைத் தூக்கு கருப்பட்டி தரேன்… கல்லைத் தூக்கு கருப்பட்டி தரேன்…” எனச் சொல்லிக்கொண்டே ஒரு கையில் சின்னக் கல்லையும், மறுகையில் தட்டானையும் பிடித்துக்கொண்டு தட்டானை கல்லைத் தூக்கச்சொல்லியதும், தட்டானைப் பிடித்து அதன் வாலில் நூலைக் கட்டி பறக்கவிட்டதெல்லாம் ஒரு காலம்.

advertisement by google

தட்டான் தாழப்பறந்தால் மழை வரும் என்பார்கள்.

advertisement by google

இன்று மழையையும் காண முடியவில்லை. தட்டானையும் கண்டுபிடிக்க முடியவில்லை.!

advertisement by google

ஹெலிகாப்டரும் தட்டானும்:

advertisement by google

தட்டான்கள் பற்றி பல ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடைபெற்றிருக்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா?

மிக நீண்ட தொலைவிற்கு வலசை போகும் திறன் கொண்ட ஒரே பூச்சியினம் தட்டான்தான்.

காற்றில் மேலடுக்கு நகர்வு மூலம் இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா சென்றுவிட்டு மீண்டும் இந்தியா திரும்பும் திறன் அவற்றிற்கு உண்டு.

மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு பறக்கும். இவற்றால் நின்றுகொண்டே பறக்க முடியும். அப்படியே 180டிகிரி தன்னைத் திருப்பிக்கொண்டு பின்னால் பறக்க முடியும்.

தட்டானைப் பார்த்துதான் ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டது என்று கூட சொல்வார்கள்.

பொதுவாக இரண்டு வகை தட்டான்கள் இருக்கின்றன.

ஒன்று சாதாரண தட்டான்.

மற்றொன்று ஊசித்தட்டான்.

இதை வேறுபடுத்தி அறிந்துகொள்ள எளிமையான வழி இருக்கிறது.

தட்டான் வந்து அமரும் போது அதன் இறக்கைகள் விரிந்த நிலையிலேயே இருந்தால் அது சாதாரண தட்டான்.

தனது முதுகுப் பகுதியுடன் இறக்கைகளை மடக்கிக் கொண்டு அமர்ந்தால் அது ஊசித்தட்டான்.

ஏறத்தாழ 6ஆயிரம் வகை தட்டான் இனங்கள் உலகம் முழுவதிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 503 இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

325மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பூமியில் வாழும் பூச்சியினம் தட்டான் மட்டுமே. உலகில் எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்க முடியுமாம்.

கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணி:

மழைக்காலத்தில் கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் பணியை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்துவந்தது தட்டான்கள்தான்.

தட்டான்களுக்கு நீர்நிலைகள்தான் உலகம்.

இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் தட்டான்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை நீர்நிலைகளில் இட்டுவிட்டுச்செல்லும்.

நம் வெப்பமண்டல சூழலுக்கு அம்முட்டைகள் 10 நாள்களில் பொறித்துவிடும்.

முட்டையிலிருந்து வெளிவரும் இளம்உயிரியானது சுமார் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டு வரை நீரிலேயே வாழும்.

அந்தக் காலகட்டத்தில் அதன் முக்கிய உணவு கொசுக்களின் லார்வாக்கள்தான்.
தன்னால் முடிந்தவரை கொசுக்களின் லார்வாக்களை உண்டு முதிர்ச்சியடைந்ததும் நீரை விட்டு வெளியேறிவிடும்.

தனது உடலைச் சுற்றியிருக்கும் உறை போன்ற பகுதியை உடைத்துக்கொண்டு இறக்கைகள் உடைய, முழுமையாக வளர்ச்சியடைந்த தட்டானாக வெளியே வரும்.

நீரில் இருக்கும் போதும் , வெளியே பறக்க ஆரம்பத்த பிறகும் கொசுக்கள்தான் அதன் பிரதான உணவு.

இரண்டு மீட்டர் வரை துல்லியமாகப் பார்க்கும் திறன் உடைய இரண்டு கூட்டுக்கண்கள் தட்டானுக்கு உண்டு.

அவை கொசுக்களை வேட்டையாடும் முறை வித்தியாசமானது.

பறக்கும்போது தனது ஆறு கால்களையும் ஒன்று சேர்த்து கூடை போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். அந்தக் கூடைக்குள் விழும் கொசுக்கள்தான் அந்நேரத்து உணவு.

பறந்துகொண்டே சாப்பிடும் அல்லது செடியில் அமர்ந்துகொண்டு சாப்பிடும்.

பின்னர் கூடைக் கால்களோடு மீண்டும் வேட்டைக்குப் புறப்பட்டுவிடும்.

இப்படிக் கொசுக்களின் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தியது தட்டான்கள்தான்.

இன்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை தட்டான்களின் உதவியால் விரட்டியிருக்கலாம்.

நீர்நிலைகளில் மணல் அள்ளுவதில் தொடங்கி, சாக்கடைக் கலப்பு வரை சகலத்தையும் செய்துவிட்ட நாம் இப்போது தட்டான்களைத் தேடுவதில் நியாயம் இல்லை.

சிறகு விரித்துப் பறக்கும் அதன் அழகும், நின்றுகொண்டே பறக்கும் அதன் திறமையும், கருப்பட்டிக்காகக் கல்லைத்தூக்கும் அதன் பாங்கும், இனி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பார்க்கமுடியாது என்பதே கசப்பான உண்மை.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button