ஒருநிமிடம் இதைபடிங்க

ஒரு புத்தத் துறவி .அவரைப் பின்பற்றியே செல்லும் சில சீடர்கள், உணாவு கிடைத்த இடம் உண்டு,உறையுள் கிடைத்த இடம் உறங்கி , தேவைப்படுவோரின் சிந்தனையைத் தெளிவித்து ஊர் ஊராய்ப் போவது இவர்களின் வழக்கம்.
அது ஒரு கொடிய , உடலை உறுத்தி வருத்தும் பனிக்காலம். துறவி சீடர்கள் புடை சூழ ஒரு கிராமத்திற்குச் சென்றார்.

அந்த கிராமத்து மக்கள் துரவிக்கு உணவளிக்கவோ , உறைவிடம் தரவோ முன்வரவில்லை. இரவு வந்து விட்டது. பனியும் கொட்டத் தொடங்கியது.சீடர்களைப் பனியும் பசியும் வாட்டத் தொடங்கியது.
வெட்ட வெளியில் , ஒரு பொட்டல் காட்டில் துறவி அமைதியாகச் சென்ரு கொண்டிருந்தார். உறங்கும் நேரம் வந்தது. சீடர்கள் மிகவும் களைத்துச் சோர்ந்து விட்டனர்.துறவி இறைவனை வேண்டத் தொடங்கினார்.

“இறைவா, நீ கொடுத்த இந்த உலக வாழ்க்கைக்கு நன்றி செலுத்துகிறோம். நீ கொடுத்த இந்த இனிய வாழ்க்கைக்கு நன்றி செலுத்துகிறோம். நீ கொடுத்த அமைதிக்கு நன்றி செலுத்துகிறோம். நீ கொடுத்த மகிழ்ச்சிக்கு நன்ரி செலுத்துகிறோம்”….பிரார்த்தனை தொடர்ந்தது. அன்கிருந்த சீடர்களுள் ஒருவனுக்குக் கோபம் வந்தது .” வானத்திலிருந்து ஊசி போல் பனி வந்து உடம்பைக் குத்துகிறது. போர்த்திக் கொள்ள சரியான துணி கூட இல்லை. உறங்க இடம் இல்லை, உலவக்கூடிய விலங்குகளின் பயம் வேறு . பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது. இந்த நிலையில் இனிமையான வாழ்வைத்
தந்த இறைவனுக்கு வெகுநேரம் நன்றி சொல்லி ஜெபம் செய்வது எவ்வாறு சரியாக இருக்க முடியும் குருவே..?” என்று அந்த சீடன் பொரிந்து தள்ளினான்.

குரு அமைதியாகக் கண்களைத் திறந்து சீடனைப் பார்த்துப் பேசலுற்றார். “ சீடனே! இத்தனை நாள் உணவும், உடையும் , உறையுளும் தந்த இறைவன் , இன்று பசியும் , பட்டினியும் , பனியும் நாம் அனுபவிக்கத் தந்திருக்கிறார். அதற்கு நன்றி சொல்ல வேண்டாமா..?

எந்த இடத்திலும் ,
எந்தச்சுழ்நிலையிலும் நாம் எதையும் ஏற்க வேண்டும் என்பதைத் தான் புத்தத் துறவியின் வாழ்க்கை நிகழ்ச்சி நம்மைச் சிந்திக்க வைக்கிறது..

இணையத்தில் பகிர