இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்

உலக ஓசோன் தினம்: மரக்கன்று நடும் விழா? கோவில்பட்டியில் பசுமைபுரட்சி? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

உலக ஓசோன் தினம்: மரக்கன்று நடும் விழா

advertisement by google

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது.

advertisement by google

கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி புதுக்கிராமம், இலுப்பையூரணி பிரதான சாலை, சிந்தாமணி நகர் பகுதிகளில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், புதுமண தம்பதி மாரிமுத்துபாண்டியன் – நந்தினி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். தொடர்ந்து, தம்பதி மரக்கன்றுகளை நட்டினர்.
விழாவில், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செண்பகசபரி பெருமாள், சமூக ஆர்வலர் முத்துமுருகன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு, ரவிமாணிக்கம், தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன், ஜெயகுமார், கால்நடைத் துறையைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல, இலுப்பையூரணி சாலையில் மரம் வளர்ப்போம், பூமி வெப்பமயமாவதைத் தடுப்போம் என்ற தலைப்பில், உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலர் நாகராஜன் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button