இன்றைய சிந்தனைபயனுள்ள தகவல்

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்?என்ற பழமொழியின் முழுவிளக்கம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பழமொழிகள்

advertisement by google

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்!

advertisement by google

எந்த இடமானாலும், விடயமானாலும் ஒரு சிறிய முயற்சி கூட செய்யாதவன் மிகப்பெரும் முயற்சியில் நான் வெற்றியடைவேன் என்று கூறுவது சாத்தியப்படுமா?

advertisement by google

அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்!

advertisement by google

குணத்தால் பிறருக்கு தீங்கு நினைப்பவர்கள், வெளித் தோற்றத்தில் தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்வார்கள்.

advertisement by google

அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?

advertisement by google

ஒரு பொருளைப் பல கடினங்களுக்கு மத்தியில் உருவாக்குகின்ற அருமை, அதை சாதரணமாகவோ அல்லது துச்சமாகவோ நினைப்பவனுக்குத் தெரியாது.

advertisement by google

குடிப்பதோ கூழ் கொப்பளிப்பதோ பன்னீர்!

ஒரு சிலர் தங்கள் வறட்டு கௌரவத்திற்காக தங்களிடம் எதுவும் இல்லையென்றாலும், அனைத்தும் இருப்பது போலவும், செல்வந்தர் போலவும் தங்களை காட்டிக் கொள்ள முயற்சி செய்வார்கள்.

அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள்!

ஒரு விடயத்தை அல்லது செயலைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்றாலும், அதைப் பற்றித் தனக்கு அனைத்தும் தெரியும் என்று காட்டிக் கொள்வதைக் குறிக்கும்.

கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை!

எப்போதும் தீய குணம் மற்றும் தீய நடத்தை கொண்டவனை, எந்த சொந்தமும், அவன் தன்னுடைய உறவு என்று சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button