இந்தியாஉலக செய்திகள்உறவுகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்?புராண காலத்திலிருந்தே வட இந்தியர்கள் தமிழர்களை ஒதுக்கி வருகின்றனர்- கருணாஸ் எம்.எல்.ஏ ஆவேசம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

புராண காலத்திலிருந்தே வட இந்தியர்கள் தமிழர்களை ஒதுக்கி வருகின்றனர்- கருணாஸ் எம்.எல்.ஏ.

advertisement by google

கோவில்பட்டியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் : தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்,அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது பற்றி அந்தக் கட்சி தான் முடிவெடுக்க வேண்டும்.
ஏ.ஆர்.ரகுமான் பிரச்சனை இன்று நேற்று நடப்பதில்லை,நடிகர் கமல்ஹாசன் திரைப்படம் இந்தியில் வெற்றி பெற்றபோது அவர் தமிழர் என்பதற்காக வட இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டார் என்பதுதான் உண்மை,புராண காலத்திலிருந்தே வட இந்தியர்கள் தமிழர்களை ஒதுக்கி வருகின்றனர்.ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழகத்தில் வட இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் .இனி தமிழகத்தில் தமிழர்களுக்கு இடம் இருக்காது.இதேபோல்தான்
ஏ.ஆர் ரகுமான் வட இந்தியர்களால் ஒதுக்கப்பட்டுள்ளார்.சிலர் லைக்வேண்டும் என்பதற்காக எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதுபோன்று சொரி சிரங்கு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் கருப்பர் கூட்டத்தினர்.சினிமாவில் குருபீசம் என்பது எப்போதும் உள்ளது.‌தமிழ் சினிமாவில் எப்போதும் சமூக கருத்துக்கள் வந்தது கிடையாது.
இனி வரப்போவதும் கிடையாது.
இங்கு அனைவரும் பணம் சம்பாதிப்பதற்காக தான் சினிமா எடுத்து வருகின்றனர்.யாரும் சமூக கருத்துக்கு படம் எடுக்கவில்லை என்று, கொரோனா பணிகளில் தமிழகஅரசு சிறப்பாக செயல்படுகிறது. கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், மக்களிடம் சுய கட்டுப்பாடு இல்லை என்றார்.

advertisement by google

இதில் மாநில துணை பொதுச் செயலாளர் பெருமாள், கொள்கை பரப்புச் செயலாளர் குமாரசாமி, ‌ அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன், ‌ தென் மண்டல அமைப்புச் செயலாளர் குமாரசாமி, மாவட்ட செயலாளர்கள் தூத்துக்குடி வடக்கு முருகன், தூத்துக்குடி தெற்கு மணிகண்டன், கோவில்பட்டி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராமமூர்த்தி , விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ‌ புதூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் அருண்குமார், பிரபாகரன், ‌ கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் காளிராஜ், ‌ மாவட்டத் துணைச் செயலாளர் கணேஷ் பிரபு, மாவட்ட தலைவர் இசக்கி பாண்டி, ‌ மாவட்ட தொண்டரணி தலைவர் மனோ, ‌ மாவட்ட மீனவர் அணி தலைவர் ராமர் பாண்டியன், ‌தூத்துக்குடி மாநகர் செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button