கிரைம்

எறும்பு

advertisement by google

எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் எறும்புகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார் !

advertisement by google

ஒரு எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது.

advertisement by google

தரை வழியே சென்று கொண்டு இருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்து விட்டு நின்றுவிட்டது.

advertisement by google

மேலே செல்ல முடியாமல் தவித்தது.

advertisement by google

சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதை பாலமாக்கி அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது !

advertisement by google

பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது.

advertisement by google

எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர் !

advertisement by google

துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண்டும் என்பதை நாம் எறும்பு இடம் இருந்து கற்றுக் கொள்ளலாம் !

ஒரு மிகச் சிறிய உயிரினமான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் , எந்தத் தடையையும் வெல்ல முடியும்.
கவலையும் காணாமல் போய்விடும்!

இன்று அதிகமானோர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.

நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே !

யார் ஒருவர் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறாரோ, அவர் தனக்குத்தானே நண்பராவார் !

பெரும்பாலான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது என்பது புரியும் !

அது போன்றுதான் தோல்வியும் !

தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியதன் அறிவிப்பு என்று சொல்லலாம் !

advertisement by google

Related Articles

Back to top button