இந்தியாஇன்றைய சிந்தனைதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு? இன்று புதிய உச்சம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு.. இன்று புதிய உச்சம்!

advertisement by google

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

advertisement by google

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 52 பேரும் அடக்கம்.

advertisement by google

அதிர்ச்சியூட்டும் கொரோனா உயிரிழப்புகள்:

advertisement by google

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் உயிரிழந்த 38 பேரில் 42 பேர் சென்னையை சேர்ந்தவர்களும், செங்கல்பட்டில் 4, திருவள்ளூரில் 3, விழுப்புரம் 2, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலியில் தலா ஒருவரும் ஆகும்

advertisement by google

அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:

advertisement by google

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 1,438 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 32,754 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 25,863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

advertisement by google

கொரோனா பாதிப்பு – பாலின வாரியான விவரம்:

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 59,377 பேரில், 36,598 பேர் ஆண்கள், 22,759 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 8,92,612 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 31,401 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

சென்னையில் 1,493 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:

சென்னையை தவிர பிற மாவட்டங்களான செங்கல்பட்டில் 121, திருவள்ளூரில் 120, கடலூர் 102, வேலூர் 87, திருவண்ணாமலை 77, மதுரை 69, காஞ்சிபுரம் 64, தஞ்சாவூர் 49, திருச்சி 36, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் விழுப்புரத்தில் தலா 30, திருநெல்வேலி 28, திண்டுக்கல் 27, நாகப்பட்டினம் 25, தென்காசி 23, கள்ளக்குறிச்சி 21, கோயம்புத்தூர் மற்றும் சேலத்தில் 12, ஈரோடு, சிவகங்கை மற்றும் தேனியில் தலா 7, அரியலூர் 6, தர்மபுரி, கரூரில் தலா 5, திருப்பூர் 4, நாமக்கல், ராணிப்பேட்டை மற்றும் தூத்துக்குடியில் தலா 2, புதுக்கோட்டையில் ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாத கொரோனா பாதிப்பு நிலவரம்:

ஜூன் 1 – 23,495
ஜூன் 2 – 24,586
ஜூன் 3 – 25,872
ஜூன் 4 – 27,256
ஜூன் 5 – 28,694
ஜூன் 6 – 30,152
ஜூன் 7 – 31,667
ஜூன் 8 – 33,229
ஜூன் 9 – 34,914
ஜூன் 10 – 36,841
ஜூன் 11 – 38,716
ஜூன் 12 – 40,698
ஜூன்13 – 42,687
ஜூன்14 – 44,661
ஜூன் 15 – 46,504
ஜூன் 16 – 48,019
ஜூன் 17 – 50,193
ஜூன் 18 – 52,334
ஜூன் 19 – 54,449
ஜூன் 20 – 56,845
ஜூன் 21 – 59,377

⚫⚫⚫⚫⚫⚫⚫⚫

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button