உறவுகள்கல்விபயனுள்ள தகவல்

குழந்தைகளுக்கு படிப்பை மட்டும் சொன்னால் பத்தாது?சுற்றும் கவனிக்கதக்க கொஞ்ச இரக்க குணமுள்ளவர்களாக வளர்க்க ?முழுவிளக்கம் கதைக்களம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

குழந்தைகளின் வழிகாட்டிகள்

advertisement by google

குழந்தைகளுக்கு படிப்பை மட்டும் சொன்னால் பத்தாது. அவர்களைச் சுற்றும் கவனிக்கத்தக்க இரக்க குணம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும். ஒரு சின்ன நிகழ்வைக் கேட்டா நீங்களே சிரிப்பீங்க.

advertisement by google

எங்கள் வீட்டு வாசலில் தினமும் பூனை ஒன்று வரும். அதற்கு பிஸ்கட் கொடுத்துக் கொஞ்சம் நேரம் கழித்துப் பால் ஊற்ற வேண்டும். அதுவரை, மியாவ்… மியாவ்…ன்னு சத்தம் போட்டுகிட்டே இருக்கும். கை வேலையாக இருந்தாலும் அது வந்து கேட்கும் போதே கொடுக்க வேண்டும். இல்லை என்றால் எனக்கு என் கணவரிடம் திட்டு தான் கிடைக்கும். இந்தப் பூனையால எனக்கும் அவருக்கு சண்டை கூட வந்திடும். உடனே செய்யச் சொல்லுவார். மத்தபடி எனக்கும் கொஞ்சம் நல்ல மனசு தாங்க!!

advertisement by google

ஒரு முறை என் தங்கை மகன் பள்ளி விடுமுறைக்கு வந்திருந்தான். அவன் அந்தப் பூனையுடன் விளையாடுவான். அதை நசுக்கித் தூக்குவான். அந்தப் பூனை என்னையப் பார்த்து கத்துச்சி. சரி இவன் இப்படித் தூக்க விடக்கூடாது இனிமேன்னு நினைச்சு இதப் பாருப்பா பூனை பிள்ளைதாய்ச்சிடா. பாரு வயிறு பெருசா இருக்குப்பாரு. அப்படின்னு சொல்லி இறக்கி விட்டுட்டேன்.

advertisement by google

மதியம் சாப்பிட்ட பிறகு மீன் முள்ளுடன் சாப்பாட்டைக் கலந்து பூனைக்கு எடுத்துப் போட்டுவிட்டு வாடான்னு தங்கை மகன் கிட்டக் கொடுத்தேன். அதற்கு அவன் பெரியம்மா பூனை பிள்ளைதாச்சியா இருக்கு. மீன் முள்ளு வயித்துல குத்தாது? வெறும் மீன் மட்டும் கலந்து குடுங்க அப்படின்னு சொன்னான்.

advertisement by google

பூனைக்குப் போய் மீன் முள் குத்துமா சிரிப்பு தான் வந்தது. இருந்தாலும் அவன் அந்தப் பூனையின் மீது கொண்ட அன்பும் அக்கறையும் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.

advertisement by google

குழந்தைகளுக்கு அக்கம் பக்கத்தில் உள்ள நமது சமூகத்துடன் அன்பும் அக்கறையுடனும் இருக்க வேண்டிய அவசியத்தை சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். பெரியவர்களை கவனித்து குழைந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். நம் செயல்களே குழந்தைகளுக்கான வழி காட்டுதல்!

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button