உலக செய்திகள்கிரைம்வரி விளம்பரங்கள்

அமெரிக்காவில் உள்நாட்டு யுத்தம் பெரிதாகுமா? முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

அமெரிக்காவில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு எப்போது வேண்டுமானாலும் சிவில் வார் தொடங்கும், உள்நாட்டு யுத்தம் பெரிதாகும் என்று கூறுகிறார்கள்.

advertisement by google

அமெரிக்காவில் தற்போது நடக்கும் போராட்டங்கள் குறித்துப் பார்க்கும் முன், இந்தப் போராட்டத்திற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

advertisement by google

அமெரிக்காவில் பல நூறு வருடங்களாக கறுப்பின மக்கள் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அங்கு போலீஸ் மூலமும், அரசு மூலம் தொடர்ந்து கருப்பின மக்கள் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள்.

advertisement by google

போலீஸ் என்கவுண்டர் தொடங்கித் தவறான குற்றச்சாட்டுக்கு சிறை தண்டனை வரை பல விஷயங்களை கருப்பின மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

advertisement by google

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்.. பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா டொனால்ட் டிரம்ப்?

advertisement by google

தற்போது இந்த அழுத்தங்கள் எல்லாம் சேர்ந்து போராட்டமாக உருவெடுத்து உள்ளது. இந்தப் போராட்டங்களுக்குப் பின் அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின இளைஞர் ஒருவரின் கொலை தான் காரணம்.

advertisement by google

கடந்த 27ம் தேதி அமெரிக்காவின் மின்னேபோலிஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது இளைஞர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் விசாரணையின் போதே இவர் கொலை செய்யப்பட்டார்.

advertisement by google

20 டாலருக்கு இவர் கள்ள நோட்டு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இவரைக் கைது செய்த போது, இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் போலீசார் காலை வைத்து அழுத்தி இருக்கிறார். இதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. போலீசின் இந்த வெறிச்செயல் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்தக் கொலை காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளது. அங்கு முதலில் மின்னேபோலிஸ் பகுதியில் வெடித்த போராட்டம் தற்போது நாடு முழுக்கப் பரவி உள்ளது.

முக்கிய நகரங்களில் போராட்டம் வெடித்து இருக்கிறது. வாஷிங்டன் டிசி, நியூயார்க், கலிபோர்னியா, மின்னெசோட்டா ஆகிய பல மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

பல லட்சக்கணக்கில் அங்கு கறுப்பின மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது அங்கு வெள்ளை மாளிகை சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. நேற்று அமெரிக்காவின் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகம் நோக்கி மக்கள் திரளாகச் சென்றனர் . ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்டு மக்கள் எல்லோரும் அங்கு வெள்ளை மாளிகை நோக்கிச் சென்றனர். வெள்ளை மாளிகையை முற்றுகையிடும் வகையில் அங்கு மக்கள் குவிந்து போராட்டம் செய்தனர். இதனால் தேசிய பாதுகாப்பு படை குவிக்கப்பட்டது.

வெள்ளை மாளிகை வெளியே பெரிய அளவில் போராட்டம் வெடித்து அது கலவரமாக மாறியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே அங்கு பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது.

அதேபோல் பாதுகாப்பு படையும் அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதிபர் டிரம்ப் இருக்கும் வெள்ளை மாளிகைக்கு வெளியே தான் இத்தனை கலவரங்கள், சண்டை நடந்துள்ளது. வெள்ளை மாளிகையை மொத்தமாகச் சுற்றி வளைக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் இந்தப் போராட்டம் காரணமாக தற்போது அதிபர் டிரம்ப் அங்கு வெள்ளை மாளிகை உள்ளே பதுங்கி உள்ளார். அங்கிருக்கும் பங்கரில் அதிபர் டிரம்ப் பதுங்கி உள்ளார். அணு ஆயுதத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்ட பங்கரில் அதிபர் டிரம்ப் பதுங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் இப்படி பங்கரில் பதுங்குவது சாதாரண விஷயம் இல்லை. இதனால் அமெரிக்கா மொத்தமாக நிலைகுலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு போராட்டம் கைமீறிப் போய் உள்ளது. இப்படியே போனால் மக்கள் அங்கு வெள்ளை மாளிகையைக் காப்பாற்றக் கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், அங்கு ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக 5 போராட்டக்காரர்கள் போராடி வருகிறார்கள்.

1:5 என்ற ரீதியில் போராட்டம் நடப்பதால் போலீசால் அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அமெரிக்காவில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு எப்போது வேண்டுமானாலும் சிவில் வார் தொடங்கும், உள்நாட்டு யுத்தம் பெரிதாகும் என்று கூறுகிறார்கள்.

அங்கு கடைசியாக 155 ஆண்டுகளுக்கு முன் 1865ல் உள்நாட்டு யுத்தம் நடை பெற்றது. ஆப்ரஹாம் லிங்கன் ஆட்சிக் காலத்தில் அங்கு உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா இடையில் இந்த உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது.

தற்போது அங்கு மீண்டும் யுத்தம் நடைபெற சூழ்நிலை உருவாகி உள்ளது கருப்பு மற்றும் வெள்ளையர்களுக்கு இடையிலான போராட்டமாக இது உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உள்நாட்டுப் போராக மாறலாம். அல்லது அமெரிக்காவில் புதிய புரட்சி வெடிக்க இது வாய்ப்பாக அமையும் என்று கூறுகிறார்கள். இனி வரும் நாட்கள் அமெரிக்காவில் இன்னும் நிலைமை மோசம் அடையும் என்கிறார்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button